கம்பராமாயணம் 7565 · யுத்த 15.252
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1குண்டலங்களும், மோலியும்ஆரமும், கோவை,
தண்டை, தோள்வளை, கடகம், என்றுஇனையன, தறுகண்
கண்ட கண்டங்கெளாடும் கணைதுரந்தன, கதிர் சூழ்
மண்டலங்களை மாறுகொண்டுஇமைத்தன, வானில்.
பொருள் · Meaning in Tamil
குண்டலங்களும் - குண்டலங்களும்; மவுலியும் - திருமுடியும்; ஆரமும் - முத்தாரங்களும்; கோவை - மணிச்சரங்களும்; தண்டை - தண்டைகளும்; தோள் வளை - தோள் வளைகளும்; கடகம் - கடகங்களும்; என்று இனையன - என்ற இவ்வாறான அணிகலன்களை; தறுகண் கணை - இலக்குவன் எய்த வலிய அம்புகள்; கண்ட கண்டங்களோடும் துரந்தன - துண்டு துண்டுகள் ஆக்கி வேகமாகச் செலுத்தின அவை; கதிர்சூழ் - ஒளி சூழ்ந்த; மண்டலங்களை - சூரிய சந்திர நட்சத்திர மண்டலங்களோடு; மாறு கொண்டு இமைத்தன வானில் - மாறுபாடு கொண்டு ஒளியோடு வானில் விளங்கின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Earrings, crowns, pearl necklaces, strings of gems,
- anklets, armlets, bracelets and the like, the fierce arrows
- drove off along with pieces cut and cut again; and in the sky
- they glittered, rivalling the orbs ringed with rays.
What the poem says
The arrows cut the demons' jewellery to pieces and hurl the fragments into the air, where earrings, crowns and armlets sparkle so brightly that they seem to compete with the sun, moon and stars.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuṇṭalaṅkaḷum, mavuliyum āramum, kōvai,
taṇṭai, tōḷvaḷai, kaṭakam, eṉṟu iṉaiyaṉa, taṟukaṇ
kaṇṭa kaṇṭaṅkaḷoṭum kaṇai turantaṉa, katir cūḻ
maṇṭalaṅkaḷai māṟukoṇṭu imaittaṉa, vāṉil.