கம்பராமாயணம் 7567 · யுத்த 15.254

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஈண்டு வெஞ்செரு எவர்க்கும் இனையன நிகழ்வுழி - இவ்வாறு இங்குக் கொடிய போர் யாவருக்கும் இத்தன்மைத்தாக நிகழுமிடத்து; நீண்ட வெள் எயிற்று அரக்கன் - நீண்ட வெள்ளிய பற்களை உடைய அரக்கனான கும்பகருணன்; மற்றொரு திசை நின்றான் - வேறு ஒரு திக்கில் போய் நின்று; இரவி கான் முளையொடு - சூரியன் மகனாகிய சுக்கிரீவனோடு; பூண்ட வெஞ்செரு பொருதான் - கொடிய போரைச் செய்தான்; காண்தகும் என - இப்போர் காணத்தக்கதாகும் என்று கருத; இமையவர் குழுக்கொண்டு கண்டார் - தேவர்கள் கூட்டமாகக் கூடிக் கண்டார்கள்.

கும்பகருணனுக்கு உதவியாக வந்த படையை இலக்குவன் அழித்த போது கும்பகருணன் வேறு ஒரு திசையில் போய் நின்று சுக்கிரீவனோடு பொருதான் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. While the fierce battle went on in this way for everyone here,
  2. the demon with long white tusks stood on another side
  3. and fought the cruel war he had taken up with the son of the Sun;
  4. the gods, thinking 'This is worth seeing,' gathered in crowds and watched.

What the poem says

While Ilakkuvaṉ is destroying the relief army, Kumpakaruṇaṉ moves to another part of the field and takes on Cukkirīvaṉ, the monkey king and son of the Sun god. The gods gather to watch this duel.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1īṇṭu veñ ceru iṉaiyaṉa nikaḻvuḻi evarkkum,
nīṇṭa veḷ eyiṟṟu arakkaṉ, maṟṟoru ticai niṉṟāṉ,
pūṇṭa veñ ceru iravi kāṉmuḷaiyoṭu porutāṉ;
‘kāṇtakum ‘eṉa imaiyavar kuḻukkoṇṭu, kaṇṭār.