கம்பராமாயணம் 7569 · யுத்த 15.256

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அம்மலை நின்று வந்து அவனி எய்திய
செம்மலை அனைய வெங்களிறும் சேனையின்
வெம்மலை வேழமும் பொருத; வேறு இனி
எம்மலை உள அவற்கு எடுக் கொணாதன?

பொருள் · Meaning in Tamil

அம்மலை நின்று வந்து - அந்த மலையினின்று வந்து; அவனி எய்திய - நிலத்தை அடைந்த; செம்மலை அனைய வெங்களிறும் - சிவந்த மலை போன்ற கொடிய யானையும்; சேனையின் - அரக்கர் சேனையில் இருந்த; வெம்மலை வேழமும் பொருத - கொடிய மலை போன்ற வேழமும் போர் செய்யலாயின; வேறு இனி எம்மலை உள - இனி வேறு எந்த மலையுள்ளது; அவற்கு எடுக்க ஒணாதன - அந்தச் சுக்கிரீவனுக்கு எடுக்க முடியாதன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The fierce elephants like red hills that came from that mountain
  2. and reached the earth, and the war-elephants of the army
  3. like cruel hills, fought each other; what other mountain
  4. is there now that he could not lift?

What the poem says

The mountain Cukkirīvaṉ throws is so large that its own wild elephants tumble down with it and fight the demons' war-elephants. The poet marvels: is there any mountain left that Cukkirīvaṉ could not lift?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1am malainiṉṟu vantu avaṉi eytiya
cem malai aṉaiya veṅ kaḷiṟum cēṉaiyiṉ
vem malai vēḻamum poruta; vēṟu iṉi
em malai uḷa avaṟku eṭukka oṇātaṉa?