கம்பராமாயணம் 7571 · யுத்த 15.258
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஏற்று ஒரு கையினால் ‘இது கொல் நீ அடா!
ஆற்றிய குன்றம்? ‘என்று அளவு இல் ஆற்றலான்
நீற்றினும் நுணுகுறப் பிசைந்து ‘நீங்கு ‘என
தூற்றினன்; இமையவர் துணுக்கம் எய்தினார்.
பொருள் · Meaning in Tamil
அளவு இல் ஆற்றலான் - அளவற்ற வலிமை உடைய கும்பகருணன்; ஒரு கையினால் ஏற்று - சுக்கிரீவன் வீசிய மலையினை ஒரு கையால் ஏற்று; அடா நீ - அடா நீ; ஆற்றிய குன்றம் இது கொல் - வலிமை கொண்டு வீசிய மலை இதுதானா? என்று - என்று சொல்லி; நீற்று இயல் நுணுகுறப் பிசைந்து - நீற்றின் தன்மையதாய் ஆகுமாறு பொடியாகப் பிசைந்து; நீங்கு எனா தூற்றினன் - போ என்று சொல்லித் தூற்றி விட்டான்; இமையவர் துணுக்கம் எய்தினார் - அப்பேராற்றல் கண்ட தேவர்கள் அச்சம் கொண்டனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Catching it with one hand, 'Is this, you wretch, the hill
- you threw with all your strength?' he of boundless might said,
- and crushing it fine as ash, with 'Begone!'
- he scattered it to the winds; the gods were seized with fear.
What the poem says
Kumpakaruṇaṉ mocks Cukkirīvaṉ, asks whether this is the best he can throw, grinds the mountain to powder in his fist and blows it away. The gods are terrified at such strength.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēṟṟu oru kaiyiṉāl ‘itukol nī aṭā!
āṟṟiya kuṉṟam? ‘eṉṟu aḷavu il āṟṟalāṉ
nīṟṟu iyal nuṇukuṟap picaintu ‘nīṅku ‘eṉa
tūṟṟiṉaṉ; imaiyavar tuṇukkam eytiṉār.