கம்பராமாயணம் 7574 · யுத்த 15.261

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சித்திர வனமுலைச் சீதை கேள்வனார்
அத்திரு மிதிலையில் அறிவு முற்றிய
பித்தன் வெஞ்சிலையினை இறுத்த பேர் ஒலி
ஒத்தது சூலம் அன்று இற்ற ஓசையே.

பொருள் · Meaning in Tamil

அன்று சூலம் இற்ற ஓசையே - அன்று சூலப்படை அனுமனால் முறிக்கப்பட்ட போது தோன்றிய ஓசை; சித்திர வனமுலைச் சீதை - தொய்யிற் கோலம் எழுதிய அழகிய முலைகளையுடைய சீதையினது; செவ்வியால் - அழகால்; மிதிலை ஊர் - மிதிலையில்; முத்தனார் - முத்தி உலகுக்கு உரிய மாலின் திருவவதாரமான இராமபிரான்; அறிவு முற்றிய பித்தன் - அறிவு நிரம்பிய பித்தனென்ற பேர் கொண்ட சிவபிரானது; வெஞ்சிலையினை இறுத்த பேர் ஒலி ஒத்தது - கொடிய வில்லினை முறித்தபோது தோன்றிய பேரோசையை ஒத்து இருந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like the great crash when, in the city of Mithilai,
  2. through the beauty of Cītai with painted, lovely breasts, the Lord of release
  3. broke the cruel bow of the madman full of wisdom,
  4. so was the sound of the trident snapping that day.

What the poem says

The crack of Kumpakaruṇaṉ's trident breaking in Aṉumaṉ's hands is compared to the sound heard long before in Mithilai, when Irāmaṉ, Vishnu incarnate, broke Civaṉ's mighty bow to win Cītai. Civaṉ is called the 'madman' (Pittaṉ), a traditional name for the god, here paired with 'full of wisdom'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cittira vaṉa mulaic cītai cevviyāl
muttaṉār mitilai ūr aṟivu muṟṟiya
pittaṉ veñ cilaiyiṉai iṟutta pēr oli
ottatu cūlam aṉṟu iṟṟa ōcaiyē.