கம்பராமாயணம் 7582 · யுத்த 15.269
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உரற்றின பறவையை - கூவிக் கொண்டிருந்த தாய்ப் பறவையை; ஊறு கொண்டு எழ - வல்லூறு பற்றிக் கொண்டு போக; சிரற்றின பார்ப்பினின் - துன்பத்தால் அரற்றிய குஞ்சுகள் போல; சிந்தை சிந்திட - (சுக்கிரீவனைக் கும்பகருணன் தூக்கிச் சென்ற போது) மனம் முறிந்திட; விரல் துறு கைத்தலத்து அடித்து - விரல்கள் நெருங்கிய கையினால் அடித்துக்கொண்டு; வெய்துயிர்த்து - பெருமூச்சு விட்டுக்கொண்டு; கவிக்குலம் அரற்றின - வானரக் கூட்டங்கள் வாய் விட்டுக் கதறின; அரக்கர் ஆர்த்தனர் - அரக்கர்கள் மகிழ்ச்சிப் பேரொலி செய்தனர்.
சுக்கிரீவனைக் கும்பகருணன் தூக்கிச் சென்ற பொழுது குரங்குப் படை கைத்தலத்து அடித்து அரற்றிய செயல் தாய்ப்பறவையை வல்லூறு கொண்டுபோக வருந்தும் பார்ப்பின் செயலை ஒத்தது. ஊறு - வல்லூறு. சிரற்றுதல் - துன்பத்தால்
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like fledglings that cried out in distress, their hearts broken,
- when a hawk seized the calling mother bird and flew up,
- the monkey hosts beat their close-fingered hands, sighed hot,
- and wailed aloud; the demons roared.
What the poem says
Watching their king carried away, the monkeys beat their hands and cry out like chicks whose mother has been snatched by a hawk, while the demons shout in triumph.