கம்பராமாயணம் 7584 · யுத்த 15.271
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
புழுங்கிய - மனம் புழுங்குவதற்குக் காரணமான; வெஞ்சினத்து அரக்கன் - கொடிய சினத்தை உடைய கும்பகருணன்; போகுவான் - சுக்கிரீவனைத் தூக்கிப் போபவன்; அழுங்கலில் - வருந்துதல் இல்லாத; கோள் முகத்து அரவம் ஆயினான் - கிரகத் தன்மை உடைய இராகு என்னும் பாம்பு போல் ஆயினான்; கதிர் எழும் இரவிதன் புதல்வன் - கதிர் விடுகின்ற சூரியன் மகனாகிய சுக்கிரீவன்; எண்ணுற - கண்டார் எண்ணுமாறு; விழுங்கிய மதி என - இராகுவால் விழுங்கப்பட்ட மதிபோல்; மெலிந்து தோன்றினான் - மெலிவுற்றுத் தோன்றினான்.
வெண்மையான சுக்கிரீவனை எடுத்துச்செல்லும் கரிய கும்பகருணனை இராகு என்னும் கரிய பாம்பாகவும் எடுத்துச் செல்லப்படும் குரக்கினத்தலைவனை வெண்மதியாகவும் குறிப்பிட்டார் என்க. அழுங்கல் - வருந்துதல். கோள்முகத்து அரவம்-கோளாகிய முகம் மட்டுமாக உள்ள இராகு என்னும் கரும் பாம்பு. பற்றும் தன்மை கொண்ட முகத்தைக் கொண்ட இராகு என்னும் பாம்பு எனினுமாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The demon of fierce, seething rage, as he went off,
- became like the serpent whose face is the seizing planet, untroubled;
- and the son of the Sun of rising rays, so that all might think it,
- appeared wasted, like the moon that has been swallowed.
What the poem says
An eclipse image: the dark Kumpakaruṇaṉ carrying off the pale monkey king looks like Rāhu, the shadow-serpent of myth that is all head, swallowing the moon. Cukkirīvaṉ, limp in his grip, looks like the moon fading in eclipse.