கம்பராமாயணம் 7585 · யுத்த 15.272

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1திக்கு உற விளக்குவான் சிறுவன் தீயவன்
மைக்கரு நிறத்திடை மறைந்த தன் உரு
மிக்கதும் குறைந்ததும் ஆக மேகத்துப்
புக்கது புறத்தது ஆம் மதியும் போன்றனன்.

பொருள் · Meaning in Tamil

திக்கு உற விளங்குவான் சிறுவன் - திக்கெல்லாம் மிக்கு ஒளி விளங்கும் கதிரவன் சிறுவனாகிய சுக்கிரீவன்; தீயவன் - கும்பகருணனது; மைக்கரு நிறத்திடை மறைந்த தன் உரு - மேகம் போன்ற கரிய நிறத்தில் மறைந்த தன்னுடைய நிறம்; மிக்கதும் குறைந்ததும் ஆக - ஒரு கால் மிக்கும், ஒருகால் குறைந்தும் தோன்றுவது; மேகத்துப் புக்கதும் புறத்தும் ஆம் - மேகத்தின் இடையில் புக்கதும் வெளிப்பட்டதும் ஆகிற; மதியும் போன்றனன் - சந்திரனையும் போன்றனன்.

சுக்கிரீவன் கும்பகருணனது கையில் இருப்பது மேகத்திடை மதிபுக்கும் வெளிப்பட்டும் தோன்றுவது போன்றதாகும். கும்பகருணன்-கருநிறம். சுக்கிரீவன் - வெண்மை நிறம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The son of him who lights up the quarters, his form hidden
  2. in the inky black colour of the wicked one, now more and now less,
  3. was like the moon that now enters a cloud
  4. and now comes out of it.

What the poem says

A second image for the captive Cukkirīvaṉ: as Kumpakaruṇaṉ's dark body shifts, the monkey's light form shows more or less of itself, like the moon slipping in and out of a black rain cloud.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tikku uṟa viḷakkuvāṉ ciṟuvaṉ tīyavaṉ
maik karu niṟattiṭai maṟainta taṉ uru
mikkatum kuṟaintatum āka mēkattup
pukkatum puṟattum ām matiyum pōṉṟaṉaṉ.