கம்பராமாயணம் 7586 · யுத்த 15.273
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கருங்கடல் கடந்த அக்காலன் - கரிய கடலைக் கடந்த அக்காலை உடையவனாகிய அனுமன்; உன்னொடு யான் ஒருங்கு அமர் புரிகிலேன் - யான் உன்னோடு பொருந்த இனிப் போர் புரிய மாட்டேன்; என - என்று; நெருங்கிய உரையினை நினைந்து நேர்கிலன் - அண்மையில் கூறிய உரையினை நினைத்து எதிர்க்காதவனாய்; காலன் வாழ் பெருங்கரம் பிசைந்து - யமன் வாழ்கின்ற தன் பெருங்கையைப் பிசைந்து கொண்டு; அவன் பின்பு சென்றனன் - அக்கும்பகருணனுக்குப் பின்பு சென்றான்.
எந்நிலையிலும் போரில் சொன்ன சொல் தவறாமை கடைப்பிடிக்கப் படுதல் காண்க. இதனையே அறப்போர் என்பர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Remembering the words he had spoken so recently, 'I will not
- fight with you again,' he would not face him;
- he whose legs had crossed the black sea, wringing his great hand where Death himself dwells,
- went along behind him.
What the poem says
Aṉumaṉ, who once leapt the ocean, is bound by his recent promise not to fight Kumpakaruṇaṉ again. He can only wring his deadly hands in frustration and follow the giant. The commentary notes this as an example of keeping one's word even in war, the ideal of righteous combat.