கம்பராமாயணம் 7587 · யுத்த 15.274
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆயிரம் பெயரவன் அடியில் வீழ்ந்தனர்
‘நாயகர் எமக்கு இனி யாவர் நாட்டினில்?
காய்கதிர்ச் செல்வனைப் பிணித்த கையினன்
போயினன் அரக்கன் ‘என்று இசைத்த பூசலார்.
பொருள் · Meaning in Tamil
வானரர்கள் இராமனிடம் ஓடிச் சென்று, காய் கதிர்ப் புதல்வனைப் பிணித்த கையினன் - எரிகின்ற கதிர்களை உடைய சூரியன் மகனைக் கையினால் கட்டி எடுத்துக்கொண்டு; அரக்கன் போயினன் என்று - கும்பகருணன் போயினான்; நாட்டினில் நாயகர் எமக்கு இனி யாவர் என்று - நாட்டில் எமக்குத் தலைவர் யாவர் என்று; இசைத்த பூசலார் - பேரொலி செய்தவர்களாய்; ஆயிரம் பெயரவன் - ஆயிரம் திருநாமங்களை உடைய இராமனது; அடியில் வீழ்ந்தனர் - திருவடியில் விழுந்தனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They fell at the feet of him of the thousand names,
- crying: 'Who will be our leader in the land now?
- With the son of the burning-rayed Sun bound in his hand
- the demon has gone!' So they raised their outcry.
What the poem says
The monkeys run to Irāmaṉ, Vishnu who bears a thousand names, throw themselves at his feet and wail that the demon has carried off their king and left them without a leader.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyiram peyaravaṉ aṭiyil vīḻntaṉar
‘nāyakar emakku iṉi yāvar nāṭṭiṉil?
kāy katirp putalvaṉaip piṇitta kaiyiṉaṉ
pōyiṉaṉ arakkaṉ ‘eṉṟu icaitta pūcalār.