கம்பராமாயணம் 7589 · யுத்த 15.276

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உடைப் பெருந் துணைவனை - என்னுடைய பெருந்துணைவன் ஆகிய சுக்கிரீவனை; உயிரின் கொண்டு போய் - என் உயிரைக் கொண்டு போவது போல் கொண்டு போய்; கிடைப்ப அருங் கொடிநகர் - நெருங்குவதற்கு அரிய கொடியோடு விளங்குகின்ற இலங்கை மாநகரை; அடையின் கேடு என - அடைந்தால் கேடு என்று சொல்லி; தொடைப் பெரும் பகழியின் - தொடுத்தல் பொருந்திய பெரிய அம்புகளின்; மாரி தூர்த்து - மழையினால் நிரப்பி; உற அடைப்பென் - முழுதுமாக அடைப்பேன் என்று; விசும்பின் ஆறு எலாம் - ஆகாய வழியை எல்லாம்; அடைத்தனன் - அடைத்தான்.

தன்னுடைப் பெருந்துணைவனைக் கொடு போய் கிடைப்பரு நகர் அடையின் கேடென பகழியின் மாரி தூர்த்து விசும்பின் ஆறு எலாம் உற அடைத்தனன் என்க. கிடைப்ப-நெருங்க. தூர்த்து-நிரப்பி. உற-முழுதும். ஆறு - வழி. பகழியின் மாரி - உருவகம். எலாம் - இடைக்குறை. கொடிநகர் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If he takes my great companion, dear as my life,
  2. and reaches that bannered city hard to approach, it is ruin,'
  3. so thinking, 'I will fill the way with a rain of great arrows set to the string
  4. and close it completely,' he blocked all the paths of the sky.

What the poem says

Irāmaṉ knows that if Cukkirīvaṉ, dear to him as his own life, is carried into the fortress, all is lost. He therefore fills every route through the sky with a solid rain of arrows to bar Kumpakaruṇaṉ's way into the city.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘uṭaip perun tuṇaivaṉai uyiriṉ koṇṭu pōy
kiṭaippa aruṅ koṭi nakar aṭaiyiṉ, kēṭu ‘eṉa,
‘toṭaip perum pakaḻiyiṉ māri tūrttu uṟa
aṭaippeṉ ‘eṉṟu, aṭaittaṉaṉ, vicumpiṉ āṟu elām.