கம்பராமாயணம் 7590 · யுத்த 15.277
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
விசும்பு தூர்த்தலால் மாதிரம் மறைந்தன - இராமன் அம்புகள் ஆகாயம் எங்கும் நிரம்பியதால் திசைகள் எல்லாம் மறைந்தன; வயங்கு வெய்யவன் - ஒளி விளங்குகின்ற சூரியனது; சோதியின் கிளர்நிலை - ஒளிக்கதிர்களின் விளங்கும் நிலையும்; தொடர்தல் ஓவின - தொடர்ந்து நிலத்தில் படுதலை நீங்கின; யாதும் விண் படர்கில - எதுவும் வானத்தில் செல்ல மாட்டாது ஒழிந்தன; இயங்கு கார் மழை மீது நின்று அகன்றன - அசைகின்ற கருநிற மேகங்கள் மேல் பகுதியில் இருந்து அகன்றன.
இராமனது அம்புகள் ஆகாயத்தை நிரப்பித் திசைகளை மறைத்து சூரிய ஒளி நிலத்தில் படாமல் நீக்கி, எவற்றையும் வானத்தில் செல்ல மாட்டாது தடுத்து கருமேகங்களை அகற்றின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The quarters vanished; the shining sun's
- bright beams ceased to reach the ground;
- nothing could move across the sky; the drifting dark rain clouds
- were driven from above, so packed was the sky.
What the poem says
Irāmaṉ's arrows fill the sky so densely that the directions disappear, sunlight can no longer reach the earth, nothing can fly, and even the rain clouds are pushed aside.