கம்பராமாயணம் 7595 · யுத்த 15.282
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அம்பு இயல் சிலையினாய் - அம்பு தொடுக்கப் பட்ட வில்லினை உடையவனே; யான் சமரம் தன்னில் - நான் போர் தன்னில்; உம்பியை முனிந்திலேன் - உன் தம்பியைச் சினந்தேன் இல்லை; அவனுக்கு ஊர்தியாம் தும்பியை முனிந்திலேன் - அவனுக்கு ஊர்தியாக அமைந்த யானை போன்றவனான அனுமனைச் சினந்தேனில்லை; தொடர்ந்த வாலிதன் தம்பியை முனிந்திலேன் - என்னைத் தொடர்ந்து வந்த வாலியின் தம்பியாகிய சுக்கிரீவனைச் சினந்தேனில்லை; புகழ் அன்று ஆதலால் - (எனக்குச் சமம் ஆனவர்கள் அல்ல) அவர்களை வெல்வது எனக்குப் புகழ் தருவதன்று ஆகையால்.
உம்பி, தும்பி என்று அவர்களைக் கேலி செய்வது போல் கூறியது ஓர் நயம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'I was not angry with your younger brother; with the elephant
- that is his mount I was not angry; with the brother of Vālī
- who pursued me I was not angry, in battle,
- you whose bow is fitted with arrows, for there is no glory in it.'
What the poem says
Kumpakaruṇaṉ claims he has not truly fought Ilakkuvaṉ, Aṉumaṉ, whom he calls Ilakkuvaṉ's 'elephant' because the prince rode on his shoulders, or Cukkirīvaṉ, since beating such lesser foes would bring no glory. The rhyming words umpi (your brother) and tumpi (elephant) carry a mocking tone.