கம்பராமாயணம் 7598 · யுத்த 15.285
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஏதி வெந்திறலினோய் - படைக்கலத்தால் செய்யும் போரில் கொடிய திறமை வாய்ந்தவனே; இமைப்பிலோர் எதிர் - தேவர்கள் முன்னிலையில்; பேது உறு குரங்கை - மனங்கலங்கிய குரங்காகிய சுக்கிரீவனை; யான் பிணித்த கைப்பிணி - யான் கட்டிய கைப்பிணிப்பை; கோதை வெஞ் சிலையினால் - கட்டமைந்த கொடிய வில்லினால்; வீடு கோடி எனின் - விடுவித்து விட்டாய் ஆனால்; சீதையும் சிறை நின்று பெயர்ந்தனள் ஆம் - சீதையும் சிறையில் இருந்து விடுபட்டவள் ஆவாள்; என்றான் - என்று கும்பகருணன் கூறினான்.
தேவர்கள் முன்பு மனங்கலங்கிய குரங்கை நீ என் கைப்பிடியில் இருந்து மீட்டு விட்டால் சீதை சிறையில் இருந்து விடுபட்டவள் ஆவாள். ஆம், பிரித்துக் கூட்டுக. இதைச் செய்தால் அதையும் செய்யலாம் என்கிறான் கும்பகருணன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'You of fierce skill in arms! Before the unblinking gods,
- if you can free with your garlanded cruel bow the dazed monkey
- from the grip of my hand that binds him,
- then Cītai too is as good as released from prison,' he said.
What the poem says
Kumpakaruṇaṉ throws down a challenge: if Irāmaṉ can free the stunned Cukkirīvaṉ from his grasp in front of the gods, then he can surely free Cītai from captivity too. Do this, and the rest follows.