கம்பராமாயணம் 76 · பால 2.56
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கூறு பாடலும் - இசை வல்லுநர் பாடுகின்ற வாய்ப்பாட்டும்; குழலின் பாடலும் - புல்லாங் குழலால் இசைக்கும் பாட்டும்; வேறு வேறு நின்று - தனித்தனியாக நின்று; இசைக்கும் வீதிவாய் - ஒலிக்கும் வீதிகளிலே; ஆறும் ஆறும் வந்து எதிர்ந்த ஆம் என - ஒரு ஆறு, மற்றொரு ஆற்றுடன் வந்து எதிர்ப்பட்டதெனக் கூறுமாறு; சாறும் வேள்வியும் தலை மயங்கும் - விழாவுக்காகவும் திருமணத்துக்காகவும் வரும் மக்கள் கூட்டம் கலக்கும்.
சாறு: விழா. வேள்வி: திருமணம்; யாகமென்றும் கொள்ளலாம். பாட்டொலியும், குழல் ஓசையும் தனித்தனியே கேட்கும் வீதிகளில் மக்கள் கூட்டம் நிறைந்திருக்கும் என்றார் விழாக்கள் எனவும் வேள்விக்கெனவும் மக்கள் கூடினர் என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Where sung melodies and melodies of the flute
- ring out, each standing apart, in the streets,
- as though one river had come to meet another,
- the festival crowds and the wedding crowds flow together.
What the poem says
A section on festivals and ceremonies begins. In the streets, vocal music and flute music can be heard separately, each from its own place. Through these streets, crowds going to festivals and crowds going to weddings or sacrifices meet and merge, like two rivers flowing into each other. The word translated "wedding" can also mean a Vedic sacrifice.