கம்பராமாயணம் 7600 · யுத்த 15.287
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1மீட்டு அவன் கரங்களால் விலங்கல் ஆரையை
மூட்டு அற நீக்குவான் முயலும் வேலையில்
வாட்டம் இல் வைத் தலை வயங்கு வாளிகள்
சேட்டு அகல் நெற்றியின் இரண்டு சேர்த்தினான்.
பொருள் · Meaning in Tamil
அவன் மீட்டு - இராமன் மீண்டும்; சரங்களால் விலங்கலானையே - அம்புகளால் மலை போலும் சுக்கிரீவனை; மூட்டு அற நீக்குவான் முயலும் வேலையில் - தடையில்லாமல் நீக்குவதற்கு முயல்கின்ற காலத்தில்; பிடர்த்தலை வயங்க வாள் தலை வாளிகள் - பிடர்த் தலையருகிலிருந்த அம்பறாத் தூணியில் இருந்து விளங்குகின்ற வாளின் தலை போன்ற கூரிய அம்புகள்; இரண்டு - இரண்டை; சேட்டு அகல் நெற்றியின் சேர்த்தினான் - கும்பகருணனது உயர்ந்து அகன்ற நெற்றியில் பாய்ச்சினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Then, as he was striving with his arrows to free
- the mountain-like one without hindrance,
- he drove two shining arrows with sword-like heads, drawn from the quiver behind his neck,
- into the high, broad forehead.
What the poem says
Irāmaṉ sets about freeing Cukkirīvaṉ. He draws two sharp arrows from the quiver at his back and drives them into Kumpakaruṇaṉ's broad, high forehead, aiming to make him loosen his grip.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mīṭṭu avaṉ caraṅkaḷāl vilaṅkalāṉaiyē
mūṭṭu aṟa nīkkuvāṉ muyalum vēlaiyil
vāḷ talai piṭarttalai vayaṅka vāḷikaḷ
cēṭṭu akal neṟṟiyiṉ iraṇṭu cērttiṉāṉ.