கம்பராமாயணம் 7601 · யுத்த 15.288
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சுற்றிய குருதியின் - அம்பு பட்டதனால் எழுந்து சூழ்ந்த குருதியால்; செக்கர் சூழ்ந்து எழ - செவ்வானம் சுற்றிலும் தோன்ற; நெற்றியின் நெடுங்கணை ஒளிர நின்றவன் - நெற்றியில் நீண்ட இரண்டு கணைகள் விளங்க நின்ற கும்பகருணன்; முற்றிய கதிரவன் முளைக்கும் முந்து - பல கதிர்களை உடைய சூரியன் தோன்றுவதற்கு முன்பு; வந்து உற்று எழும் - வந்து பொருந்தித் தோன்றுகின்ற; அருணனது உதயம் போன்றனன் - அருணனது உதயத்தையொத்தான்.
குருதி படிந்த கும்பகருணனது நெற்றியில் பாய்ந்து குத்திட்டு நின்ற அம்புகள் பல கதிர்களை உடைய சூரியன் தோன்றுவதற்கு முன் அருணனது உதயத்தை ஒத்தது. அருணோதயம் சிவப்பாக இருக்கும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the red of the blood spread round him like the evening glow,
- he who stood with the long arrows shining in his forehead
- was like the rising of Aruṇaṉ, who comes
- and appears before the full-rayed sun is born.
What the poem says
Blood spreads round Kumpakaruṇaṉ's head like a red sky, and the two arrows glinting in his forehead make him look like Aruṇaṉ, the charioteer of the Sun, whose red glow of dawn rises just before the sun itself.