கம்பராமாயணம் 7602 · யுத்த 15.289
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
குன்றின் வீழ் அருவியின் - மலையில் இருந்து விழுகின்ற அருவி போல; குதித்துக் கோத்து இழி - கும்பகருணனது நெற்றியில் இருந்து குதித்துக் கொண்டு ஒன்று சேர்ந்து விழுகின்ற; குருதி நீர் - இரத்தமாகிய நீர்; புன்தலை முகத்தைப் போர்த்தலும் - புல்லிய நிலையோடு கூடிய சுக்கிரீவனது முகத்தை நிறைத்தலும்; இன்துயில் உணர்ந்து என - இனிய தூக்கத்தில் இருந்து எழுந்தமை ஒப்ப; உணர்ச்சி எய்தினான் - நினைவு உணர்ச்சியை அடைந்தான்; வன்திறல் தோற்றிலான் - (அப்போது) இதுவரை யாரிடத்தும் வலிய திறல் தோலாதவனாகிய கும்பகருணன்; மயக்கம் எய்தினான் - மயக்கம் அடைந்தான்.
கும்பகருணனது நெற்றியில் இருந்து பெருகிய குருதி முகத்தில் பட்டுச் சுக்கிரீவன் மயக்கம் தெளிந்தான் என்றவாறு. ஒருவன் நினைவு பெறப் பிறிதொருவன் மயக்கம் அடைந்தான் என்றமையால் உலகியலில் இன்ப துன்பங்கள் மாறி வரும் இயல்புடையன என உணர்த்தியவாறு. சுக்கிரீவனை விடுவித்தலே நோக்கம்; அன்றியும் தோளை அரிந்து விடுவிக்க வேண்டியில்லாமல் இரண்டு அம்புகளை நெற்றியின் பால் சேர்த்து விடுவித்தலே போதுமானது ஆயின் கும்பகருணனை இகழ்ந்ததாம். அதனால் இராமனுக்குக் குறைவில்லை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the blood from the wretched head, leaping and joining and pouring
- like a waterfall dropping from a hill, covered his face,
- he regained his senses as if waking from sweet sleep;
- and he who had never yielded his great strength fell into a swoon.
What the poem says
Kumpakaruṇaṉ's blood streams down like a waterfall onto the face of Cukkirīvaṉ, who wakes as if from sleep. At the same moment the giant, never before overcome, is stunned. One recovers just as the other faints, a reminder that joy and sorrow alternate. Irāmaṉ's aim was simply to free his friend, and two arrows were enough.