கம்பராமாயணம் 7605 · யுத்த 15.292

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வானரம் ஆர்த்தன; மழையும் ஆர்த்தன;
தானமும் ஆர்த்தன; தவமும் ஆர்த்தன;
மீன் நரல் வேலையும் வெற்பும் ஆர்த்தன;
வானவரோடு நின்று அறமும் ஆர்த்ததே.

பொருள் · Meaning in Tamil

வானரம் ஆர்த்தன - சுக்கிரீவன் திரும்பி வந்தது கண்டு குரங்குகள் ஆரவாரித்தன; மறையும் ஆர்த்தன - வேதங்களும் ஆரவாரித்தன; தான் அர மகளிரும் - தேவ மகளிரும்; தமரும் ஆர்த்தனர் - உறவினர்களும் பேரொலி செய்தனர்; மீன் நரல் வேலையும் - மீன்கள் ஒலிக்கும் கடலும்; வெற்பும் ஆர்த்தன - மலையும் ஒலி செய்தன; வானவரோடு நின்று அறமும் ஆர்த்ததே - தேவர்களுடன் சேர்ந்து நின்று அறக்கடவுளும் ஆரவாரம் செய்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The monkeys roared; the Vedas too resounded;
  2. the celestial women and kinsfolk shouted;
  3. the sea where fish cry out and the mountains roared;
  4. and Dharma itself, standing with the gods, cheered.

What the poem says

Cukkirīvaṉ's return sets off rejoicing everywhere: the monkey army, the Vedas, the heavenly women, the sea and mountains, and even Dharma, the god of righteousness, standing among the gods, cry out in joy.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāṉaram ārttaṉa; maṟaiyum ārttaṉa;
tāṉ ara makaḷirum tamarum ārttaṉar;
mīṉ naral vēlaiyum veṟpum ārttaṉa;
vāṉavarōṭu niṉṟu aṟamum ārttatē.