கம்பராமாயணம் 7606 · யுத்த 15.293

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

காந்து இகல் அரக்கன் - சினங்கொள்ளும் தன்மை உள்ள வலிமை பெற்ற கும்பகருணனுடைய; வெங்கரத்துள் நீங்கிய ஏந்தலை - கொடிய கைகளில் இருந்து தப்பி வெளிப்பட்ட சுக்கிரீவனை; அகம் மகிழ்ந்து - மனம் மகிழ்வுற்று; எய்த நோக்கிய வேந்தனும் - முழுமையாகப் பார்த்த இராமனும்; சானகி இலங்கை வெஞ்சிறைப் போந்தனளாம் என - சானகி இலங்கையின் கொடிய சிறையில் இருந்து மீண்டும் திரும்பி வந்து சேர்ந்தனளாம் என; பொருமல் நீங்கினான் - துன்பம் நீங்கி மகிழ்ச்சி அடைந்தான்.

கும்பகருணனின் வெங்கரத்தில் இருந்து சுக்கிரீவன் வெளிப்பட்டு வந்தது, சானகி இலங்கைச் சிறை வீடு பெற்றது போல இராமனுக்கு மனமகிழ்ச்சி தந்ததென்க. "யான் பிணித்த கைப்பிணி, கோதை வெஞ்சிலையினால் கோடி வீடு எனின், சீதையும் பெயர்ந்தனள் சிறை நின்றாம்” என்று (7556 கும்பகருணன் கூறிய வஞ்சினத்தை உடன்கொண்டு கூறியவாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The king, who gazed with a glad heart at the noble one
  2. freed from the cruel hand of the demon of burning hostility,
  3. as if Jānaki had come back from the cruel prison of Ilaṅkai,
  4. was rid of his grief.

What the poem says

Irāmaṉ feels as much relief at seeing Cukkirīvaṉ escape as if Cītai herself, here called Jānaki, had been freed from Ilaṅkai. This answers Kumpakaruṇaṉ's boast that freeing the monkey king would be as good as freeing Cītai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāntu ikal arakkaṉ veṅ karattuḷ nīṅkiya
ēntalai akam makiḻntu eyta nōkkiya
vēntaṉum cāṉaki ilaṅkai veñ ciṟaip
pōntaṉaḷām eṉap porumal nīṅkiṉāṉ.