கம்பராமாயணம் 7608 · யுத்த 15.295
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உதிரப் போர்வையான் - குருதியே போர்வையாகப் போர்க்கப்பட்ட கும்பகருணன்; அக்கணத்து - மூக்கும் செவியும் பறிக்கப்பட்ட அந்தக் கணத்தில்; அறிவு வந்து அணுக - மயக்க நிலை நீங்கி அறிவு வந்து விளங்க; கவி அரசு - குரங்குகளுக்குத் தலைவனாகிய சுக்கிரீவன்; அங்கை நின்று உக்கனன் என்னும் உண்மையும் - தன் அகங்கையில் இருந்து அப்பால் சென்று விட்டான் என்ற உண்மையையும்; மிக்கு உயர் நாசியும் - மிக உயர்ந்து தோன்றுகிற மூக்கும்; செவியும் - காதுகளும்; வேறு இடம் புக்கதும் உணர்ந்தனன் - வேறு இடத்திற்குப் போய் விட்டதையும் உணர்ந்தான்.
நாசியும் செவியும் அறுபட்டதாக உணராமல் ஞானிகளைப் போல் வேறிடம் புக்கதாகக் கும்பகருணன் உணர்ந்தான் என்றது ஓர் நயம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At that moment, as his wits returned, he who was wrapped in blood
- realised the truth that the monkey king
- had slipped from his palm, and that his high-standing nose and ears
- had gone off to some other place.
What the poem says
Kumpakaruṇaṉ comes round, covered in blood, and grasps what has happened: his captive has escaped and his nose and ears are gone. The poet wryly says the giant perceives them as having 'gone elsewhere', as a detached sage might, rather than as cut off.