கம்பராமாயணம் 7610 · யுத்த 15.297
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எண்ணுடைத் தன்மையன் - ஆராய்தல் தன்மை உடைய இராவணன்; இனைய - இவ்வாறான நிலையினை எண்ணாது; எண் இலாப் பெண்ணுடைத் தன்மையன் - ஆய்தல் இல்லாத சூர்ப்பனகையின் சொல் கேட்ட தன்மையன் ஆனதால்; ஆய பீடையால் - ஏற்பட்ட போரில்; புண்ணுடைச் செவியொடு மூக்கும் பொன்றலால் - கும்பகருணனுடைய புண்ணையுடைய காதுகளுடன் மூக்கும் அழிதலால்; கண்ணுடைச் சுழிகளும் குருதி கால்வன - அவனுடைய கண்ணுடைய வட்டங்களும் குருதியை வெளிப்படுத்துவனவாயின.
இராவணன் சூர்ப்பனகை சொல் கேட்டு ஆராய்ச்சி யின்றி, சீதையைக் கவர்ந்ததால் ஏற்பட்ட போரில் கும்பகருணன் செவியும் மூக்கும் இழந்து சினத்தால் கண்களில் குருதி வெளிப்பட நின்றான். அறுபட்ட உறுப்புகள் மட்டுமன்றி அறுபடாத உறுப்பும் குருதி வெளிப்படுத்தியமை கூறினார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Through the trouble that came because the thinking one became
- one who heeded a woman of no thought,
- since the wounded ears and the nose were destroyed,
- even the eye sockets ran with blood.
What the poem says
The poet traces the disaster to its root. Irāvaṇaṉ, able to reason, followed the thoughtless urging of his sister Cūrppaṇakai and seized Cītai, bringing on this war. Now Kumpakaruṇaṉ, whose nose and ears are lost, is so enraged that even his uninjured eyes pour blood.