கம்பராமாயணம் 7611 · யுத்த 15.298
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உற்றது - தனக்கு நேர்ந்தது; சீ சி எனத் தீயும் நெஞ்சினான் - சீ சீ என்று சொல்லி வேகின்ற நெஞ்சை உடைய கும்பகருணன்; ஏசியுற்று எழும் விசும்பினரைப் பார்க்கும் - தன்னை ஏசிக்கொண்டு எழுகின்ற தேவர்களைப் பார்ப்பான்; தன் நாசியைப் பார்க்கும் - தன் மூக்கைப் பார்ப்பான்; முன் நடந்த நாளுடை வாசியைப் பார்க்கும் - முன் வெற்றி பெற்று நடந்த நாளுக்கும் இதற்கும் உள்ள வேறுபாட்டை எண்ணிப் பார்ப்பான்; இம்மண்ணைப் பார்க்குமால் - இந்த நிலத்தைப் பார்ப்பான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He looks at the sky-dwellers rising up to mock him; he looks
- at his own nose; he looks at the difference from the days
- he once walked in triumph; he looks at this earth,
- his heart burning, saying 'Shame, shame, what has befallen me!'
What the poem says
Humiliated, Kumpakaruṇaṉ glances in turn at the jeering gods, at his own mutilated face, at the gulf between this moment and his past victories, and at the ground, burning with shame.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēciyuṟṟu eḻum vicumpiṉaraip pārkkum: taṉ
nāciyaip pārkkum; muṉ naṭanta nāḷuṭai
vāciyaip pārkkum; im maṇṇaip pārkkumāl
‘cī ci uṟṟatu! ‘eṉat tīyum neñciṉāṉ.