கம்பராமாயணம் 762 · பால 12.24
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அன்று முதல் இன்றளவும் - அன்று முதல் இன்று வரை; ஆரும் - எந்த அரசனும்; இந்தச் சிலை அருகு - இந்தச் சிவவில்லின் பக்கத்தில்; சென்றும் இலர் - சென்றதும் இல்லை; போய் ஒளித்த - ஓடி ஒளிந்து கொண்ட; தேர்வேந்தர் - தேர்வீரரான மன்னவர்; திரிந்தும் இலர் - திரும்பி வரவுமில்லை; இனி - இனிமேல்; என்றும் - (சீதைக்கு) எப்பொழுதும்; மணமும் இல்லை - திருமணம் நிகழாது; என்று இருந்தேம் - என்று கருதியிருந்தோம்; இவன் ஏற்றின் - இந்த இராமன் (இச்சிவதனுசை) நாணேற்றினால்; நன்று - நல்லதாகும்; மலர்க்குழல் சீதை - (அப்போது) மலரணிந்த கூந்தலையுடைய சீதையின்; நலம் - கன்னிமை அழகும்; பழுது ஆகாது - வீணாகாது; என்றான் - என்று கூறி முடித்தான்.
இராமன் வில்லை நாணேற்றி வளைத்தால் சீதை இடர்க்கடல் நீங்கும் என்பது. முன்பு சனகன் கூறியதை இப்பொழுது சதானந்தனும் கூறி முடித்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'From that day to this, no one at all has even gone near
- this bow; the chariot-kings who ran and hid have never come back;
- we had settled that from now on there would never be a wedding; if this one strings it,
- it will be well, and the beauty of Cītai, flowers in her hair, will not be wasted,' he said.
What the poem says
Catāṉantaṉ ends his story. Since that war no one has dared approach the bow, and the defeated kings have stayed away. The court had resigned itself to Cītai never marrying.
But if this young man, Irāmaṉ, can string the bow, all will be well and her youth and beauty will not go to waste. The priest closes on the same hope Caṉakaṉ had voiced earlier.