கம்பராமாயணம் 763 · பால 12.25

Section பால காண்டம் / 12. கார்முகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'நினைந்து முனி பகர்ந்த எலாம் நெறி உன்னி, அறிவனும் தன்
புனைந்த சடை முடி துளக்கிப், போர் ஏற்றின் முகம் பார்த்தான்;
வனைந்து அனைய திரு மேனி வள்ளலும், அம் மாதவத்தோன்
நினைந்த எலாம் நினைந்து, அந்த நெடும் சிலையை நோக்கினான்.

பொருள் · Meaning in Tamil

அம் முனி - அந்தச் சதானந்த முனிவன்; நினைந்து - ஆலோசித்து; பகர்ந்த எலாம் - கூறியவற்றை யெல்லாம்; அறிவனும் - ஞானியான கோசிகனும்; நெறி உன்னி - முறைப்படி சிந்தித்து; தன் சடை புனைந்த முடி - (சதானந்தன் கூறிய சொல்லுக்கு உடன் பட்டதைக் குறிப்பிக்குமாறு) அழகிய தன் சடைமுடியை; துளக்கி - அசைத்தவனாய்; போர் ஏற்றின் - போர் செய்ய வல்ல காளை போன்ற இராமனது; முகம் பார்த்தான் - முகத்தை (இந்த வில்லை நீ முறிப்பாயாக என்னும் குறிப்பில்) நோக்கினான்; வனைந்தது அனைய - ஓவியத்தில் எழுதியது போன்ற; திருமேனி வள்ளலும் - திருமேனிப் பொலிவுள்ள அந்த இராமனும்; அம் மாதவத்தோன் - பெருந்தவத்தை யுடையவனான விசுவாமித்திரன்; நினைந்த எலாம் - எண்ணிய மனக் குறிப்பையெல்லாம்; நினைந்து - தானும் கருதி (பிறகு); அந்த நெடுஞ்சிலையை - நெடிய அந்தச் சிவதனுசை; நோக்கினான் - பார்த்தான்.

'நினைந்து முனி பகர்ந்த எலாம் நெறியுன்னி' என்றது தெய்வ இயல்பு வாய்ந்தவள் சனகன் மகள் என்பதனையும் அவளை அடைவதன் அருமைகளையும் 'இவன் ஏற்றின் நன்று' என்று சதானந்தர் கூறியதையும் உட்கொண்டு. வனைந்தனைய - வனைந்தது அனைய. அல்லது வனைந்தால் அனைய எனலாம். வில்லை நோக்கியது - இந்த வில்லை எந்த இடத்தில் பற்றி எடுக்கலாம் என்ற ஆலோசனையால் 'போரேறு': - 'புட்குழிஎம் போரேற்றை' - (பெரிய திருமடல். 1/7

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Weighing in due order all that the thoughtful sage had said, the wise one
  2. shook his crown of braided matted locks and looked into the face of that bull of battle;
  3. and the generous one, whose sacred form seemed fashioned by an artist, grasping all
  4. that the great ascetic had in mind, turned his gaze on that long bow.

What the poem says

Vicuvāmittiraṉ considers what Catāṉantaṉ has said about Cītai's divine nature and the condition for winning her. He nods his matted head in agreement and looks at Irāmaṉ, a silent signal that he should go and break the bow.

Irāmaṉ, as beautiful as a painted figure, understands the unspoken instruction and looks at the bow, already judging where to take hold of it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'niṉainta muṉi pakarnta elām neṟi uṉṉi, aṟivaṉum taṉ
puṉainta caṭai muṭi tuḷakkip, pōr ēṟṟiṉ mukam pārttāṉ;
vaṉaintaṉaiya tirumēṉi vaḷḷalum, am mā tavattōṉ
niṉainta elām niṉaintu, anta neṭuñ cilaiyai nōkkiṉāṉ.