கம்பராமாயணம் 7623 · யுத்த 15.310
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆடவர்க்கு அரசனும் தொடர அவ் வழி
கோடையின் கதிர் எனக் கொடிய கூர்ங்கணை
ஈடு உறத் துரந்தனன்; அவையும் இற்று உக
கேடகப் புறத்தினால் கிழியச் சிந்தினான்.
பொருள் · Meaning in Tamil
ஆடவர்க்கு அரசனும் - ஆடவர்க்குத் தலைவன் ஆகிய இராமனும்; தொடர - தொடர்ச்சியாக; அவ்வழி - அப்போது; கோடையின் கதிர் எனக் - கோடைக்காலத்துக் கதிரவனின் கதிர்கள் போல உள்ள; கொடிய கூர்ங்கணை - கொடுமையுள்ள கூர்மையான அம்புகளை; ஈடு உறத் துரந்தனன் - வலிமை பொருந்தச் செலுத்தினான்; அவையும் இற்று உக கிழிய - அவ்வம்புகள் முறிந்து விழவும், கிழியவும், கேடகம் புறத்தினால் வீசினான் - கும்பகருணன் கேடயத்தின் பின்புறத்தால் வீசினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The king of men too pressed on, and then
- he sent sharp, cruel arrows like the rays of the summer sun
- with full force; and he swung the back of his shield
- so they broke, fell and were torn apart.
What the poem says
Irāmaṉ, best of men, follows with a volley as fierce as summer sunlight, but Kumpakaruṇaṉ sweeps them aside with the back of his shield, snapping them to pieces.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṭavarkku aracaṉum toṭara av vaḻi
kōṭaiyiṉ katir eṉak koṭiya kūrṅ kaṇai
īṭu uṟat turantaṉaṉ; avaiyum iṟṟu uka
kēṭakap puṟattiṉāl kiḻiya vīciṉāṉ.