கம்பராமாயணம் 7625 · யுத்த 15.312
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஊழித்தீ அவிய ஊதுவான் - ஊழிக்காலத்துத் தீயும் அவியும்படி பெருமூச்சு விடுபவனாகிய அக்கும்பகருணன்; தடக்கை வாள் அற்றது - பெரிய கையில் உள்ள வாள் அழிந்தது; அற்றது இல் என - அழிய வில்லை என்று கண்டோர் எண்ணும்படி; மற்று ஒரு வயிர வாள் கடிதின் வாங்கினான் - வேறு ஒரு வலிமையான வாளை விரைவாகக் கையில் எடுத்துக்கொண்டு; முற்றினென் முற்றினென் என்று - யாவரையும் முடித்து விட்டேன்; முடித்து விட்டேன் என்று சொல்லிக் கொண்டு; முன்பு வந்து உற்றனன் - இராமன் முன்னே வந்து நின்றான்.
கும்பகருணன் அழிந்த வாளுக்குப் பதிலாக அது அழியவில்லையோ என்று கண்டோர் கருத விரைவாக வேறு ஒரு வாள் கைக்கொண்டு யாவரையும் முடித்துவிட்டேன் முடித்துவிட்டேன் என்று சொல்லிக்கொண்டு முன்பு வந்து உற்றனன் என்க. தடக்கை-உரிச் சொல் தொடர். முற்றினென் - தன்மை ஒருமை வினைமுற்று. முற்றினென் முற்றினென்-அடுக்குத் தொடர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that it seemed 'The sword in his great hand is cut? It is not cut,'
- he swiftly seized another diamond sword,
- and crying 'I have finished them, finished them,' came forward
- and stood, he whose breath could blow out the fire of the world's end.
What the poem says
Kumpakaruṇaṉ, whose breath could put out the fire that ends the world, grabs a new sword so fast that onlookers think the first was never broken. Boasting that he has finished off his foes, he advances on Irāmaṉ.