கம்பராமாயணம் 7628 · யுத்த 15.315
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வில்வினை ஒருவனும் - வில் தொழிலில் ஒப்பற்ற இராமனும்; இவனை வீட்டுதற்கு - இக்கும்பகருணனை அழிப்பதற்கு; ஒல்வினை இது - ஏற்ற போர்த்தொழில் செய்யத்தக்க காலம் இது; எனக் கருதி - என்று எண்ணி; ஊன்றினான் - அவன் எதிர் ஊன்றினான்; தீயன பல்வினை பரந்தபோது - தீயவினைகள் பலவாக வந்தபோது; ஒரு நல்வினை ஒத்தது நடந்த தானையே - அவற்றைத் தடுக்கத் தக்க ஒப்பற்ற நல்வினையை ஒத்தது நடந்து வந்து சேர்ந்த படைகள் என்றவாறு.
இப்பாடலில் வரும் இறுதி இரண்டு அடிகள் ஊன்றி நோக்குதற்குரியன. நடந்ததானை - இராவணன் அனுப்பிய படைகளைக் குறிப்பதாகக் கொண்டால், பல்வினை தீயன பரந்த என்பது குறிக்கும் பொருள் என்ன என்ற குழப்பம் தோன்றும், பல்வினை தீயன பரந்த போது - கும்பகருணனுக்கு உதவியாக இராவணன் அனுப்பிய தீய பல்படை போர்க்களத்தில் பரந்த போது ஊன்றினான் ஆகிய இராமன் பின் சென்ற படை நல்வினையை ஒத்தது எனக் கோடலே பொருந்தும். பல்வினை தீயன பரந்தபோது கும்பகருணனுக்குத் துணையாய் இராவணன் அனுப்பிய படை. நல்வினை ஒத்தது நடந்த தானையே - இராமனுக்குப் பின் நடந்த படை எனக் கோடலே பொருந்தும். (இராவணன் அனுப்பிய உதவிப் படைகள் வந்து சேர்ந்தவுடன் வில் வினையில் ஒருவனாகிய கும்பகருணனும் இராமனை அழிப்பதற்குத் தக்க சமயம் இது என்று கருதி போரில் கருத்தூன்றினான். பல தீய வினைகள் மேலும் மேலும் பரந்தபோது ஒரே ஒரு நல்வினை வந்தது போல உதவிப்படை இருந்தது எனச் சொல்லி போர்க்களத்தில் தோல்விகளைச் சந்தித்துத் துன்புறும் வேளையில் அண்ணன் அனுப்பிய படை நல்வினை போல வந்தது என்று தம்பி மகிழ்வதாகவே கூறுதலில் தவறில்லை. அப்போதைக்கு அவன் நிலைக்கு அவ் உதவிப்படை ஆறுதலை தருவது ஆதலின் என்பது மகாவித்துவான் மயிலம். வே. சிவசுப்பிரமணியன் அவர்கள் கருத்து. இக்கருத்துக்கு வில்வினை ஒருவன் கும்பகருணன் என்றும் இவனை-இராமனை என்றும் பொருள் மாற்றினால் போதும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The one supreme in the work of the bow, thinking, 'This is the fitting
- moment for deeds that will destroy him,' stood firm;
- like a single good deed when many evil deeds have spread,
- was the army that marched on.
What the poem says
The verse can be read two ways. Most simply, Irāmaṉ, the matchless archer, braces to destroy Kumpakaruṇaṉ, and the army that follows him is like one good deed standing against the many evils of Irāvaṇaṉ's new host. Another reading takes the 'archer' to be Kumpakaruṇaṉ: to the beleaguered giant, the relief force his brother sends feels like a single stroke of good fortune amid a run of disasters.