கம்பராமாயணம் 7630 · யுத்த 15.317

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சூழி வெங் கடகரி புரவி தூண்டுமால்
ஆழி அம் தேரொடு மிடைந்த ஆர்கலி
ஏழ் இருகோடி வந்து எய்திற்று என்பரால்;
ஊழியின் ஒருவனும் எதிர் சென்று ஊன்றினான்.

பொருள் · Meaning in Tamil

சூழி வெங்கடகரி - முகபடாம் அணிந்த கொடிய மதநீர் ஒழுகும் யானையும்; புரவி - குதிரையும்; தூண்டு ஆழி தேர் - செலுத்தப்படுகின்ற பெரிய சக்கரங்களை உடைய தேரும்; வெம்பெரும் படை - கொடிய பெரிய காலாட்படையும்; மிடைந்த - நெருங்கிய; ஏழ் இரு கோடி ஆர்கலி வந்து எய்திற்று - பதினான்கு கோடி பெரும் படைக்கடல் வந்து சேர்ந்தது; ஊழியின் ஒருவனும் - ஊழிக்காலத்திலும் அழியாது நிற்பவனாகிய திருமாலின் அவதாரமாகிய இராமனும்; எதிர்சென்று ஊன்றினான் என்பரால் - எதிரே போய் தடுத்து நின்றான் என்பர்.

நால்வகைப் படையும் ஏழ் இரு கோடி வந்தது. ஊழியின் ஒருவனும் எதிர் சென்று ஊன்றினான் என்க. சூழி-முகபடாம். ஆழி-சக்கரம். ஆர்கலி-கடல். ஆல்-அசை

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. A sea of fierce great forces, crowded with fierce rut-streaming elephants in face-armour,
  2. horses and chariots with driven wheels,
  3. fourteen crores of them, came, they say;
  4. and the One who remains at the world's end went out to meet them and stood firm.

What the poem says

The relief army is said to number fourteen crores (140 million) of elephants, horses, chariots and infantry, a sea of troops. Irāmaṉ, Vishnu who survives even the dissolution of the universe, advances alone to hold them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cūḻi veṅ kaṭa kari puravi tūṇṭu tēr
āḻi vem perum paṭai miṭainta ārkali
ēḻ iru kōṭi vantu eytiṟṟu eṉparāl;
ūḻiyiṉ oruvaṉum etir ceṉṟu ūṉṟiṉāṉ.