கம்பராமாயணம் 7632 · யுத்த 15.319
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இமையோரும் - தேவர்களும்; அரங்கு இடந்தன - போர்க்களத்தில் (இராமனது அம்பால்) அறுத்து வீழ்த்தப்பட்ட; அறுகுறை நடிப்பன அல்ல என்று - தலையற்ற உடற்குறைகள் நடிப்பன அல்ல என்றும்; மரங்கிடந்தன - மரத்துண்டங்கள் கிடக்கின்றன; மலைக்குவை கிடந்தனவாம் - மலைக் குவியல்கள் கிடக்கின்றனவாம்; என மாறாடி - என்று மாறுபட்டுக் கூறுமாறு; கரம் கிடந்தன காத்திரம் கிடந்தன - கைகளோடு கூடியனவாய வீரர்களின் உடல்கள் கிடந்தன; கறை படும்படி கவ்வி சிரம் கிடந்தன - குருதிக் கறை படும்படி மண்ணைக் கவ்விக் கொண்டு வீரர்களின் தலைகள் கிடந்தன; கண்டனர் - ஆகியவற்றைக் கண்டனர்; உயிர் கொடு திரிவாரைக் கண்டிலர் - உயிர் கொண்டு உலவுபவர்களைக் கண்டிலராயினர்.
இராமனது அம்பால், மரங்கள் கிடந்தன போலக் கையொடு கூடிய வீரர்களின் உடலங்களும், மலைக்குவை கிடந்தன போல், கறைபடும்படி கவ்விச் சிரம் கிடத்தலையும் கண்டனர் அன்றி உயிரோடு உள்ளவர்களைத் தேவர்கள் கண்டிலர். அரங்கு-போர்க்களம். இடத்தல் - அறுத்து வீழ்த்தப்படுதல். அறுகுறை - கவந்தம். மாறாடி-மாறுபட்டு மயங்கி. காத்திரம்-உடல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Even the gods, saying 'Those cut down on the field are not headless trunks that dance,'
- and confusedly, 'Trees lie there, heaps of mountains lie there,'
- saw arms lying, bodies lying, heads lying
- biting the earth so that it was stained; they saw none moving about with life.
What the poem says
Irāmaṉ's arrows devastate the relief army. Headless bodies, which in battle were said to rise and dance, here lie still. The gods, looking down, mistake the fallen bodies for felled trees and the heaped heads for hills; they see no one left alive.