கம்பராமாயணம் 7633 · யுத்த 15.320
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அடுகளம் திடர் ஆக - போர்க்களம் மேடாகுமாறு; இற்ற அல்லவும் - முறிந்து போனவையல்லனவும்; ஈர்ப்புண்ட அல்லவும் - குருதிப் பெருக்கால் இழுத்துக்கொண்டு போகப்பட்டவை யல்லனவும்; இடை இடை முறிந்து எங்கும் துற்ற அல்லவும் - இடை இடையே முறிந்து எல்லாவிடங்களையும் தூர்த்தன அல்லாதனவும்; துணிபட்ட அல்லவும் - துண்டு பட்டவை யல்லனவும்; சுடு பொறித் தொகை தூவி - சுடுகின்ற தீப்பொறிச் சுடர்களைச் சிந்தி; வெற்ற வெம்பொடி ஆயின அல்லவும் - வீணாக வெவ்விய பொடியாகிப் போயின வல்லவும்; வேறு ஒன்று நூறு ஆகி அற்ற அல்லவும் - வெவ்வேறாக நூறு துண்டாகி இல்லாமல் போயின அல்லவும்; படைக்கலம் கண்டிலர் - (ஆகியவற்றைக் கண்டனரல்லது) செவ்வனே உள்ள படைக்கலங்களைக் காண மாட்டாதாராயினர் பிறர்.
அடுகளத்தில் அரக்கரது படைக்கலங்கள் முழுவதும் அழிந்து கிடந்தனவன்றிச் செவ்விய படைக்கலம் எதுவுமில்லை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Apart from those broken, those swept away, those snapped in places
- and choking every spot, those cut to pieces, those that scattered showers of burning sparks
- and turned to useless hot dust, those that broke into a hundred separate pieces
- and were gone, they saw no weapons, as the killing field rose into mounds.
What the poem says
Every weapon of the demon army has been broken, cut, swept off by the blood, or reduced to sparks and dust. The battlefield is heaped high with the wreckage, and not a single whole weapon can be seen.