கம்பராமாயணம் 7636 · யுத்த 15.323
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உருகெழு பரி எல்லாம் - நிறம் விளங்குகின்ற குதிரைகள் எல்லாம்; ஆடல் தீர்ந்தன - வலிமை குறைந்தனவாய்; வளை கழுத்து அற்றன - வளைந்த கழுத்து இல்லாதனவாய்; அதிர் பெருங்குரல் நீத்த - ஒலிக்கின்ற பெருங்குரலை விட்டனவுமாய்; தாள் துணிந்தன - தாள் துண்டுபட்டனவுமாய்; தறுகண் வெங்கரி நிரை - அஞ்சாமை உடைய கொடிய யானைக் கூட்டங்களால்; தாங்கிய பிணத்து ஓங்கல் - தோன்றிய பிணமலையின்; கோடு அமைந்த - கரை அமைந்த; வெங்குருதி நீர் ஆறுகள் - வெப்பமான குருதிநீர் ஆறுகளின்; சுழி தொறும் கொணர்ந்து உந்தி ஓடல் அன்றி - சுழிகள் தோறும் கொண்டு தள்ளப் பெற்று ஓடுவன அன்றி; நின்று உகள்வன கண்டிலர் - உயிரோடு நின்று நடப்பனவற்றைக் கண்டிலர்.
பரிகள் உறுப்பும் உயிரும் இழந்து யானைகளின் பிண மலையைக் கரையாகக் கொண்டு ஓடிய குருதி ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Their prancing ended, their curved necks severed, their loud neighing gone,
- their legs cut through, swept along at every eddy
- of the hot rivers of blood whose banks were the mountains of corpses
- of the fierce, fearless elephant ranks, none of the splendid horses was seen standing alive.
What the poem says
The horses of the demon army share the fate of the elephants and chariots. Mutilated and dead, they are carried off by rivers of blood whose banks are formed by the heaped bodies of elephants. Not one is left standing.