கம்பராமாயணம் 7637 · யுத்த 15.324
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வேதநாயகன் - வேதங்களுக்கெல்லாம் தலைவனான இராமன்; வெங்கணை வழக்கத்தின் மிகுதியை - கொடிய அம்புகளை எய்த முறையின் மிகுதியை; வெவ்வேறு இட்டு ஓதுகின்றது என்? - வெவ்வேறாக வகுத்துப் பிரித்துச் சொல்ல வேண்டுவது எதற்கு?; உம்பரும் - தேவர்களும்; வெங்களத்து வந்து உற்றாரை அரக்கர் - கொடிய போர்க் களத்திற்குப் போரிட வந்து உற்றவர்களான அரக்கர்களை; காதல் விண்ணிடைக் கண்டனர் அல்லது - விரும்பும் தன்மை உடைய வானுலகத்தில் கண்டனரே அல்லாமல்; மலையினும் பெரியாரை - மலையினும் மாணப் பெருந்தோற்றம் உடைய அந்த அரக்கர்களை; கண்டிலர் - (உயிரோடு போர்க்களத்தில் கண்டிலர்); கணவர்தம் உடல் நாடும் - போர்க்களத்தில் கணவரது உடலைத் தேடிப் பார்க்கின்ற; மாதர் வெள்ளமே கண்டனர் - அரக்க மாதர்களுடைய வெள்ளத்தையே கண்டனர்.
இராமனின் வில்லாற்றல் பெருமையை வெவ்வேறாக வகுத்துக் கூற வேண்டியது எற்றுக்கு, போருக்கு வந்தவர்களைத் தேவர்கள் விண்ணிடைக் கண்டனர். போர்க்களத்தில் கணவர் உடலைத் தேடி ஓடும் மகளிர் வெள்ளமே கண்டனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Why tell, case by case, the abundance of the Lord of the Vedas' practice with fierce arrows?
- The gods saw those demons who had come to the cruel battlefield
- only in the longed-for heaven; for the rest they saw
- only a flood of women searching for their husbands' bodies; they did not see those greater than mountains.
What the poem says
There is no need to list Irāmaṉ's feats one by one. The gods now see the mountain-sized demons only in heaven, where warriors killed in battle go; on the field they see only crowds of demon wives hunting among the dead for their husbands.