கம்பராமாயணம் 7638 · யுத்த 15.325
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கதிர்வரப் பனிப்பட்டாலென - கதிரவன் வருகையால் பனி இல்லாமல் ஒழிந்தது போல; அப்படை படுவது பட்டது - அந்த அரக்கர் பெரும்படை இல்லாமல் பட்டு அழிந்தது; இமையவர் - தேவர்கள்; பற்றார் துனிப்பட்டார் எனத் துளங்கினர் - பகைவர்கள் வெறுப்படைந்தார்கள் என மகிழ்ச்சியால் விளக்கம் பெற்றார்கள்; யாவர்க்கும் தோலாதான் - எவருக்கும் தோலாதவனான கும்பகருணன்; இனிப் பட்டான் என - இனி இறந்து படுவான் என; வீங்கின அரக்கரும் ஏங்கினர் - மகிழ்ந்த அரக்கர்களும் ஏக்கமுற்றார்கள்; தனிநாதன் - ஒப்பற்ற தலைவனாகிய இராமன்; இவன் அந்தோ தனிப்பட்டான் என - இந்தக் கும்பகருணன் ஐயோ தனிமையாக ஆகிவிட்டான் என்ற இரக்கத்தால்; அவன் முகம் நோக்கி ஒன்று உரைத்தனன் - அவனுடைய முகத்தைப் பார்த்து ஒன்று கூறத் தொடங்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As frost perishes when the sun appears, that army perished; the gods
- brightened, saying 'The foes are undone'; and even the demons, who had swelled with pride, despaired,
- saying 'He who yields to none will now fall'; 'Alas, this one
- is left alone!' thought the matchless Lord, and looking at his face, said something.
What the poem says
The whole relief army melts away like frost before the sun. The gods rejoice and the demons despair for Kumpakaruṇaṉ, who has never been defeated. Irāmaṉ, seeing the giant now standing utterly alone, is moved to pity and speaks to him.