கம்பராமாயணம் 7639 · யுத்த 15.326
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஏதியோடு எதிர் பெருந்துணை இழந்தனை - படைக்கலங்களுடன் எதிர்க்க வல்ல பெருந்துணையான படைகளை இழந்தாய்; ஒரு தனி எதிர்நின்றாய் - தன்னந் தனியனாய் எதிரே நின்றாய்; நீதியோனுடன் பிறந்தனை ஆதலின் - நீதிநெறி தவறாத வீடணனுடன் பிறந்தனை ஆதலின்; நின் உயிர் நினக்கு ஈவென் - உன் உயிரை உனக்குத் தருவேன்; போதியோ - இப்போது இலங்கைக்குத் திரும்பிப் போய் விடுகிறாயா?; பின்றை வருதியோ - பின்பு மீண்டும் வருகிறாயா?; அன்று எனின் போர் புரிந்து இப்போதே சாதியோ? - அல்ல எனின் போர் செய்து இப்போதே இறந்து படுகிறாயோ?; உனக்கு உறுவது சமைவுறத் தெரிந்து சொல்லுதி - உனக்குப் பொருந்தியதை அமைவுடன் ஆய்ந்து சொல்லுக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'You have lost the great host that faced us with weapons; you stand alone before me;
- because you were born with the righteous one, I will give you your life;
- will you go? Will you come back later? If not, will you fight
- and die right now? Consider well and tell me what suits you, sir!'
What the poem says
Irāmaṉ makes Kumpakaruṇaṉ an offer. Because he is the brother of the righteous Vīṭaṇaṉ, Irāmaṉ will spare his life. He may withdraw to the city, return to fight another day, or fight on now and die. Let him think and choose.