கம்பராமாயணம் 7640 · யுத்த 15.327

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘இழைத்த தீவினை இயற்றிலது ஆகலின்,யான் உனை இளையோனால்
அழைத்த போதினும் வந்திலை,அந்தகன் ஆணையின்வழி நின்றாய்;
பிழைத்ததால் உனக்கு அருந்திரு,நாளொடு; பெருந்துயில் நெடுங்காலம்
உழைத்து வீடுவது ஆயினை; என் உனக்குஉறுவது ஒன்று? என்றான்.

பொருள் · Meaning in Tamil

இழைத்த தீவினை இற்றிலது ஆகலின் - நீ முன்பு செய்துள்ள தீவினை நீங்கவில்லை ஆதலால்; யான் உனை இளையோனால் அழைத்த போதினும் வந்திலை - நான் உன்னை இளையவனாகிய வீடணன் மூலம் அழைத்த போதும் வந்திடாமல்; அந்தகன் ஆணையின் வழி நின்றாய் - யமனது ஆணைக்கு உட்பட்டு நின்றாய்; உனக்கு அருந்திரு நாளொடு பிழைத்ததால் - நீ யான் அழைத்து வாராமையால் பெருஞ்செல்வத்தையும் வாழ்நாளையும் தவற விட்டனை; பெருந்துயில் நெடுங்காலம் உழைத்து வீடுவது ஆயினை - பெருந்துயிலை நெடுங்காலம் செய்து இறப்பதற்கு ஒருப்பட்டு நின்றாய்; என் உனக்கு உறுவது ஒன்று உரை என்றான் - உன் மனத்தில் உறுவது எதுவோ அதனைச் சொல் என்றான் இராமன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Because the evil you have done is not yet spent, even when I called you
  2. through your younger brother you did not come; you stood by the command of Death;
  3. so great fortune and your span of days have slipped from you; having toiled long
  4. at your great sleep, you are set to die; what is it you want? Speak,' he said.

What the poem says

Irāmaṉ recalls that he had invited Kumpakaruṇaṉ, through Vīṭaṇaṉ, to join him, but the giant refused, bound by past sins and by his fate. Thus he has thrown away prosperity and life. After his long sleeps, he now faces death. Irāmaṉ asks him to say what he truly wants.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘iḻaitta tīviṉai iṟṟilatu ākaliṉ, yāṉ uṉai iḷaiyōṉāl
aḻaitta pōtiṉum vantilai, antakaṉ āṇaiyiṉ vaḻi niṉṟāy;
piḻaittatāl uṉakku arun tiru, nāḷoṭu; perun tuyil neṭuṅ kālam
uḻaittu vīṭuvatu āyiṉai; eṉ uṉakku uṟuvatu oṉṟu? urai eṉṟāṉ.