கம்பராமாயணம் 7641 · யுத்த 15.328
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(அது கேட்ட கும்பகருணன் மற்று எலாம் நிற்க - நீ கூறிய மற்றவைகள் எல்லாம் இருக்கட்டும்; வாசியும் - மிக்குத் தோன்றுகின்ற சிறப்பும்; மானமும் - மானமும்; மறத்துறை வழுவாத கொற்ற நீதியும் - வீரத்துறையில் இருந்து தவறாத வெற்றியோடு பொருந்திய நீதியும்; குலமுதல் தருமமும் - குலத்துக்கு முதன்மையாக உள்ள அறங்களும்; என்று இவை குடியாகப் பெற்ற நுங்களால் - என்னும் இவை குடியிருக்கும் இடமாக உள்ள உங்களால்; எங்களைப் பிரிந்து - எங்களை விட்டுப் பிரிந்து போய்; தன் பெருஞ்செவி மூக்கோடும் அற்ற எங்கை போல் - தன்னுடைய பெரிய காதுகளையும் மூக்கையும் இழந்த எமது தங்கையைப் போல; என் முகம் காட்டி நின்று ஆற்றலென் உயிர் - என் முகத்தைக் காட்டிக்கொண்டு உயிரோடு இருக்கப் பொறுக்கேன்.
வாசியும், மானமும், கொற்றமும், மறமும் உள்ள உங்களால் எங்கை காதும் மூக்கும் இழந்து உயிர் வாழ்வது போல நான் காதும் மூக்கும் இழந்து உயிர் வாழப் பொறேன். தான் உறுப்பிழந்து உயிர் வாழக் கூடாது என்ற மான உணர்வு மிகுதியால் கும்பகருணன், "மற்று எலாம் நிற்க” என்கிறான். நீங்கள் சிறப்பும் மானமும், மறத்துறை வழுவாத கொற்றநீதியும் உடையவர்கள். ஆனால் உங்களால்தான் எங்கை பெருஞ்செவியும் மூக்கும் இழந்தாள் என்று கூறும் பகுதியில் எள்ளல் குறிப்புக் காண்க. வாசி-மிகுந்து தோன்றுகிற சிறப்பு. அம்மா - கேட்பிக்கும் சொல், அசை எனினுமாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Let all else be; distinction, honour, the conquering justice
- that never strays from the way of valour, the dharma first of your race,
- these dwell in you as their home; yet through you, parted from us,
- like my sister who lost her great ears and nose, I cannot bear to live and show my face, sir!'
What the poem says
Kumpakaruṇaṉ answers with bitter irony. Irāmaṉ and his brother are said to have every virtue, yet it was through them that his sister Cūrppaṇakai lost her nose and ears. Now he has lost his own, and his sense of honour will not let him live on, disfigured, as she does.