கம்பராமாயணம் 7642 · யுத்த 15.329

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முடியாதாய் - அழிவு இல்லாதவனே; எங்களால் வானவர் நோக்கு இழந்தனர் - எங்களால் தேவர்கள் பெருமை இழந்தார்கள்; அவ்வகை நிலை நோக்கி - அந்த வகையான நிலைமையினைப் பார்த்ததால்; தாக்கு அணங்கு அனையவள் பிறர் மனை எனத் தடுத்தனென் - தீண்டி வருத்தும் அணங்கை ஒத்த சீதை பிறர் மனைவி ஆகவே கைப்பற்றலாகாது எனத் தடுத்தேன்; தக்கோர் முன் வாக்கு இழந்தது என்று அயர்வுறுவேன் - அது ஏற்றுக் கொள்ளப் படாமையால் தக்கவர்களுக்கு முன் பேசுவதற்கு உரிய வாக்குப் போய்விட்டது என்று வருந்துகிறேன்; மாற்றாரால் - அப்படிப்பட்ட நான் பகைவரால்; செவி தன்னோடு மூக்கு இழந்தபின் - காதுகளையும் மூக்கையும் இழந்தபிறகு; மீளல் என்றால் அது முடியுமோ - திரும்பி நகருக்குத் திரும்புவதென்றால் அது முடியுமோ என்றவாறு.

முன் வாக்கிழந்த நான் இப்போது மூக்கும் செவியும் இழந்தேன் என்று கும்பகருணன் கூறுகிறான். நோக்கு - பெருமை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The gods lost their glory because of us; seeing that state,
  2. I tried to stop him, saying the one who torments like a goddess is another's wife;
  3. I grieve that my word went for nothing before the worthy; and now that, with my ears,
  4. I have lost my nose to enemies, can I go back? Can it be done, you who never perish?'

What the poem says

Kumpakaruṇaṉ recalls that he warned Irāvaṇaṉ not to hold Cītai, another man's wife, but was ignored and so lost face among the wise. Having now lost nose and ears to his enemies as well, he cannot return to the city in shame.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘nōkku iḻantaṉar vāṉavar, eṅkaḷāl; av vakai nilai nōkki,
tākku aṇaṅku aṉaiyavaḷ, piṟar maṉai ‘eṉat taṭuttaṉeṉ takkōr muṉ
vākku iḻantatu eṉṟu ayarvuṟuvēṉ cevi taṉṉoṭu māṟṟārāl
mūkku iḻantapiṉ mīḷal eṉṟāl, atu muṭiyumō? muṭiyātāy!