கம்பராமாயணம் 7643 · யுத்த 15.330
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உங்கள் தோள் தலை வாள் கொடு துணித்து - உங்களது தோளையும் தலையையும் வாளைக் கொண்டு துணித்து உயிர் குடித்து - உயிரைக் குடித்து; எம்முன் உவந்து எய்த - எமக்கு முன்னவனாகிய இராவணன் மகிழ்ந்து அடையுமாறு; நங்கை நல்நலம் கொடுக்கிய வந்த நான் - சீதையின் அழகு நலத்தை அவனுக்குக் கொடுப்பதற்காகப் போருக்கு வந்த நான்; வானவர் நகை செய்ய - தேவர்கள் சிரிக்குமாறு; செங்கை தாங்கிய சிரத்தொடும் - குருதிபட்டுச் சிவந்த கையால் தலையைத் தாங்கிக்கொண்டு; கண்ணின் நீர் குருதியினொடு தேக்கி - கண்ணீரைக் குருதியுடன் கலந்து தேங்கச் செய்து; எங்கை போல் எடுத்து அழைத்து - எனது தங்கையைப் போல் குரலெடுத்து அழைத்துக் கொண்டு; நான் இராவணன் எதிர் வீழ்வெனோ - நான் இராவணன் எதிரில் சென்று வீழ்வதற்கு உரியனோ (அல்லன்.
உங்களை அழித்து என் அண்ணனுக்கு நங்கை நல்நலம் கொடுக்கிய வந்த நான் வானவர் நகைக்க, கைதலை மேற்கொண்டு கண்ணீரும் குருதியும் வடிய இராவணன் எதிர் செல்வேனோ செல்லேன் என்கிறான் கும்பகருணன். மேல்கண்ட மூன்று பாடல்களில் கும்பகருணன் தான் மூக்கும் செவியும் இழந்ததைக் குறித்தே பேசுகிறான். இப்பேச்சின் மூலம் அவனது அளத்தற்கரிய தன்மான உணர்வை நாம் உணரலாம். அம்மா - அசை
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'I who came to cut off your shoulders and heads with the sword, drink your lives,
- and give my elder brother the lady's fair beauty to enjoy, shall I, while the gods laugh,
- holding my head in my red hand, pooling tears with blood,
- crying out aloud like my sister, fall before Irāvaṇaṉ, sir?'
What the poem says
Kumpakaruṇaṉ came out to kill Irāmaṉ and Ilakkuvaṉ and win Cītai for his brother. Should he now go back like Cūrppaṇakai did, clutching his head, weeping blood and wailing, and throw himself before Irāvaṇaṉ while the gods mock? He will not. In these three verses he speaks only of the loss of his nose and ears, revealing his immense pride.