கம்பராமாயணம் 7644 · யுத்த 15.331
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நீ ஒரு தனி உலகு லத் நீ ஒப்பற்ற சிறந்த மூன்று உலகிற்கும்; ஒருத்தன் - ஒப்பற்ற தனி முதல்வன்; ஆயினும் - ஆனாலும்; பழி ஓரும் கருத்தினால் வரும் சேவகன் அல்லையோ - பிறர்க்கு வரும் பழியை ஆராய்ந்து அறியும் மனக்கருத்து உள்ள வீரனல்லையோ?; சேவகர் கடன் ஓராய் - எனினும் வீரர் தம் கடமையை எண்ணிப் பாராதவனாய் உள்ளாயே; உங்களை செருத்திண் வாளினால் - உங்களைப் போர்க்களத்தில் வலிய வாளினால்; திறத்திறன் அமர்த்துறை சிரம் கொய்து - துண்டம் துண்டமாகப் போரில் தலையை அறுத்து; பொருத்தினால் அது பொருந்துமோ - பொருத்தினால் அது பொருந்துமோ?; தக்கது புகன்றிலை போல் என்றான் - நீ தகுதியானதைச் சொல்லவில்லை என்றான் கும்பகருணன்.
மூவுலகுக்கும் ஒப்பற்ற தனி முதல்வனும் பழி ஓருங்கருத்தினால் வரு சேவகனும் ஆன நீ அறுத்த தலையை மீண்டும் பொருத்துதல் போல பேசுகிறாய். தகுதியானதைச் சொல்லவில்லை. என்னை நீ ஊருக்குத் திரும்பிச் செல்லுகிறாயா? என்று கேட்பது உன் பெருமைக்குத் தகுதியன்று என்றவாறு. கொய்ததலை மீண்டும் தலையில் பொருந்தாதது போல் நான் இழந்த மானத்தை இனிப் பெறமுடியாது என்கிறான். ஆவியை விட்டாயினும் மானங்காப்பேன் என்ற கருத்தினன் கும்பகருணன் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Though you alone are the one Lord of all the three worlds,
- are you not a warrior who comes with a mind that weighs dishonour? Not weighing a warrior's duty,
- if one cut off your heads in the field of battle, piece by piece, with a strong sword,
- and then joined them back, would they fit? Have you not failed to speak what is fitting?' he said.
What the poem says
Kumpakaruṇaṉ rejects Irāmaṉ's offer of mercy. Irāmaṉ, lord of the three worlds and a warrior who understands honour, should know that to go home now would be like trying to stick a severed head back on. Lost honour cannot be restored, and he would rather lose his life than his honour.