கம்பராமாயணம் 7645 · யுத்த 15.332

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்று, தன் நெடுஞ் சூலத்தைஇடக்கையின் மாற்றினன்; வலக்கையால்
குன்று நின்றது பேர்த்து எடுத்து, இருநிலக்குடர் கவர்ந்தனெக் கொண்டான்,
சென்று விண்ணொடு பொறியொடும்தீச்செல, சேவகன் செனி நேரே,
‘வென்று தீர்க ‘என விட்டனன்;அது வந்து பட்டது மேல் என்ன.

பொருள் · Meaning in Tamil

என்று - என்று சொல்லித்; தன் நெடுஞ்சூலத்தை இடக்கையின் மாற்றினன் - தனது வலக்கையில் இருந்த நெடுஞ்சூலத்தை இடக்கைக்கு மாற்றிக் கொண்டு; வலக்கையால் - வலது கையினால்; இருநிலக் குடர் கவர்ந்தென - பெரிய நிலத்தின் குடலைக் கவர்ந்தாற்போல்; குன்று நின்றது பேர்த்து எடுத்து - அருகில் இருந்த குன்றினைப் பெயர்த்து எடுத்து; கொண்டான் - கையில் கொண்டவனாய்; விண்ணொடும் பொறியொடும் தீச்செல சென்று - வானத்தில் சென்று தீப்பொறியும் தீயும் வெளிப்பட; சேவகன் செனி நேரே வென்று தீர்க என விட்டனன் - வீரனாகிய இராமனுடைய தலைக்கு நேராக வெற்றி கொண்டு தீர்க என்று வீசி விட்டான்; அது வந்து பட்டது மேல் என்ன - அது வந்து இராமன் மேல் பட்டது என்று எண்ணுமாறு நெருங்க; (தொடரும். குளகம்.

நேரே வென்று தீர்க என விட்டனன். அது வந்து பட்டது மேல் என்ன. அந்த மலை இராமன் மேல் பட்டுவிட்டது. என்று கண்டோர் எண்ணுமாறு நெருங்க, குடர்கடைப்போலி. செனி - இடைக்குறை (சென்னி - தலை)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So saying, he shifted his long trident to his left hand; with his right
  2. he wrenched up a hill that stood there, as if seizing the entrails of the broad earth,
  3. and as it went through the sky with sparks and fire,
  4. he flung it straight at the warrior's head, crying 'Win and finish!', so it seemed to have struck him.

What the poem says

Kumpakaruṇaṉ moves his trident to his left hand, tears up a hill with his right, as if ripping out the earth's bowels, and hurls it at Irāmaṉ's head. It flies blazing through the air and seems certain to hit. The sentence runs on into the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu, taṉ neṭuñ cūlattai iṭakkaiyiṉ māṟṟiṉaṉ; valak kaiyāl
kuṉṟu niṉṟatu pērttu eṭuttu, iru nilak kuṭar kavarnteṉak koṇṭāṉ,
ceṉṟu viṇṇoṭum poṟiyoṭum tīccela, cēvakaṉ ceṉi nērē,
‘veṉṟu tīrka ‘eṉa viṭṭaṉaṉ; atu vantu paṭṭatu mēl eṉṉa.