கம்பராமாயணம் 7646 · யுத்த 15.333
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அனைய குன்று எனும் அசனியை - அந்தக் குன்று என்ற பேரிடியை; யாவர்க்கும் அறிவு அரும் தனிமேனி - எவர்க்கும் அறிதற்கு அரிய ஒப்பற்ற சிவனது திருமேனியை; புனையும் நல்நெடு நீறு என நூறிய - அழகுபடுத்தும் நல்ல சிறந்த திருநீற்றுத்தூளி என்று கூறுமாறு பொடி செய்த; புரவலன் - இராமன்; பொரவென்று - போர் செய்ய வென்று; நினையும் மாத்திரத்து ஒருகை நின்று ஒரு கையின் நிமிர்கின்ற நெடுவேலை - எண்ணும் அளவில் ஒரு கையில் இருந்து மற்றொரு கையில் நிமிர்ந்து தோன்றுகிற நெடிய சூலத்தை; தினையின் மாத்திரை - தினைப் பொழுதில்; துணிபட - துண்டுபடுமாறு; முறை முறை - போரிட வேண்டிய முறைப்படி; சரம் சிந்தி சிந்தினன் - அம்புகளைச் சிந்திச் சிதறினான்.
கும்பகருணன் வீசிய மலையைத் தூளாக்கினான் இராமன். அடுத்த கணத்தில் கும்பகருணன் இடக்கையில் மாற்றிய சூலத்தை வலக்கையில் இராமன் மேல் விட மாற்ற உடனே இராமன் அச்சூலத்தைத் தினையளவு நேரத்தில் துண்டுபடச் செய்தான். அனைத்தும் விரைந்து நிகழ்ந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- That thunderbolt of a hill, the protector ground into powder
- like the fine sacred ash that adorns the matchless form beyond all knowing;
- and the long spear that, the moment he thought to fight, leapt from one hand into the other,
- he cut to pieces the size of millet grains, loosing arrow after arrow.
What the poem says
Irāmaṉ reduces the flying hill to dust, fine as the holy ash Civaṉ smears on his body. Then, as Kumpakaruṇaṉ switches the trident back to his right hand to throw it, Irāmaṉ shreds it with arrows into fragments as tiny as millet seeds, all in an instant.