கம்பராமாயணம் 7647 · யுத்த 15.334

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அண்ணல் வில் கொடுங்கால் விசைத்துஉகைத்தன, அலைகடல் வறள் ஆக
உண்ண கிற்பன, உருமையும் சுடுவன,மேருவை உருவிப் போய்
விண்ணகத்தையும் கடப்பன, பிழைப்பு இலவெய்யவன் மேல் சேர்ந்த
கண்ணுதல் பெருங் கடவுள்தன்கவசத்தைக் கடந்தில கதிர் வாளி.

பொருள் · Meaning in Tamil

அண்ணல் - பெருமையில் சிறந்த இராமனுடைய வில் கொடுங்கால் விசைத்து உகைத்தன - வில்லினது வளைந்த காலிடத்தில் இருந்து வேகமாகச் செல்லுமாறு விடுத்த; கதிர் வாளி - ஒளி பொருந்திய அம்புகள்; அலை கடல் வறளாக உண்ணகிற்பன - அலையையுடைய கடல் வறண்டு போகுமாறு நீரைப் பருகும் தன்மை பெற்றனவும்; உருமையும் சுடுவன - இடியையும் சுட வல்லனவும்; மேருவை உருவிப் போய் விண்ணகத்தையும் கடப்பன - மேரு மலையை ஊடுருவிச் சென்று வானிடத்தையும் கடப்பனவும்; பிழைப்பு இலா மெய்யன - தவறில்லாமல் பயனை உண்மையில் விளைவிப்பனவும்; மேல் சேர்ந்த - ஆக இருப்பினும் கும்பகருணனது உடல்மீது பொருந்தியுள்ள; கண்ணுதல் பெருங் கடவுள் தன் கவசத்தைக் கடந்தில - நெற்றிக் கண்ணனாகிய சிவபிரான் ஈந்த கவசத்தைத் துளைக்க மாட்டாவாயின.

மிக வலிய இராமன் அம்புகள் கும்பகருணன் அணிந்திருந்த கண்ணுதற் பெருங்கடவுள் தன் கவசத்தைத் துளைக்க முடியவில்லை. 330 ஆவது பாடலில் அறிவு அருந்தனிமேனியனாய் குறிக்கப்பட்ட சிவபிரான் இப்பாடலில் கண்ணுதல் பெருங் கடவுள் என்று குறிக்கப்பட்டமை காண்க. தொடர்ந்து வரும் பாடல்களில் (330, 331, 331) சிவபிரான் குறிக்கப்பட்டமை கொண்டு அறிவு அருந்திருமேனி என்ற தொடர் சிவபிரானுக்கு உரியது போல் தோன்றுவதை எண்ணுக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The shining arrows the lord drove swiftly from the curved limb of his bow,
  2. able to drink the wave-tossed sea dry, able to burn even the thunderbolt,
  3. able to pierce Mēru and pass beyond the heavens, unerring and true,
  4. could not get through the armour of the great god with the eye in his brow, which he wore.

What the poem says

Irāmaṉ's arrows are mighty enough to drain the ocean, scorch lightning and pierce Mount Mēru, yet they cannot penetrate Kumpakaruṇaṉ's armour, a gift from Civaṉ, the god with the third eye in his forehead.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṇṇal vil koṭuṅ kāl vicaittu ukaittaṉa, alai kaṭal vaṟaḷāka
uṇṇakiṟpaṉa, urumaiyum cuṭuvaṉa, mēruvai uruvip pōy
viṇṇakattaiyum kaṭappaṉa, piḻaippu ilā meyyaṉa mēl cērnta
kaṇṇutal peruṅ kaṭavuḷtaṉ kavacattaik kaṭantila katir vāḷi.