கம்பராமாயணம் 7648 · யுத்த 15.335
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தாக்குகின்றன - தான் விடுத்த அம்புகள் கவசத்தின் மீது மோதுகின்றன எனினும்; தலையது நுழைகில - நுனிகள் கவசத்தினுள் நுழைய மாட்டாதனவான தன்மையை; தாமரைத் தடங்கண்ணான் நோக்கி - தாமரைத் தடங்கண்ணன் ஆன இராமன் பார்த்து; இங்கு இது சங்கரன் கவசம் என்று - இக்கவசம் சிவன் அளித்தது என்று; உணர்வுற நுனித்து உன்னி - உணர்வு தோன்ற அதை நுணுகி எண்ணிப் பார்த்து; அங்கு அவன் அடு படை ஆக்கி - அப்போது சிவனது கொல்லும் தன்மையுள்ள அம்பினை வில்லில் பூட்டி; தொடுத்து விட்டு அறுத்தனன் - தொடுத்துவிட்டு அழித்தனன்; அது சிந்தி வீக்கு இழந்தது - அச்சிவ கவசம் கட்டுக் குலைந்ததாகி; வரைசூழ் விரிசுடர் வீழ்ந்தென்ன வீழ்ந்தது - மேருமலையை வலமாக வரும் கதிரவன் வீழ்ந்தது போல் ஒளியுடன் பூமியில் விழுந்தது.
சிவனது கணை பாசுபதக்கணை எனப்படும். சிவகவசத்தை சிவனது கணையால் இராமன் அறுத்தனன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Seeing that they struck but their points would not enter, the lotus-eyed one
- looked and, perceiving, 'Here this is Caṅkaraṉ's armour,' pondered it closely,
- then fitted that god's own killing weapon, loosed it and cut it; and it, scattered,
- its bindings lost, fell, like the spreading sun that circles the mountain falling.
What the poem says
Irāmaṉ realises the armour is Civaṉ's (Caṅkaraṉ's) and answers it with Civaṉ's own weapon, traditionally the Pāśupata arrow. The armour bursts apart and falls blazing to the ground like the sun that circles Mēru dropping from the sky.