கம்பராமாயணம் 7649 · யுத்த 15.336

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1காந்து வெஞ்சுடர்க் கவசம் அற்றுஉகுதலும், கண்தொறும் கனல்சிந்தி,
ஏந்து தன் நெடுந் தோள்புடைத்து ஆர்த்து,அங்கு ஓர் எழுமுனை வயிரப் போர்
வாய்ந்த வல்நெடுந் தண்டுகைப்பற்றினன்; வானரப்படை முற்றும்
சாந்து செய்குவன ஆம் ‘எனமுறைமுறை அரைத்தனன், தரையோடும்

பொருள் · Meaning in Tamil

வெஞ்சுடர் காந்து கவசம் - வெப்பமான ஒளியை வெளியிடுகிற கவசம்; அற்று உகுதலும் - அறுபட்டுச் சிந்திய அளவில்; கண் தொறும் கனல் சிந்தி - தன் இரு கண்களிலும் நெருப்புப் பொறியைச் சிந்தி; ஏந்து வல்நெடுந் தோள் புடைத்து ஆர்த்து - ஓங்கிய வலிய நெடிய தோளைத் தட்டிப் பேரொலி செய்து; அங்கு - அப்போது; எழுமுனைவயிரப் போர் வாய்ந்த ஓர் வல்நெடுந் தண்டு கைப்பற்றினன் - இரும்பு முனை உடையதும் உறுதியுடையதும், போர்க்கு வாய்த்ததும் ஒப்பற்றதுமான வலிய நெடிய தண்டாயுதத்தைக் கையில் கொண்டவனாய்; வானரர் படை முற்றும் சாந்து செய்குவனாம் என - குரங்குப்படை முழுவதையும் சாந்து போல் ஆக்கி விடுவான் என்று கண்டோர் கருதுமாறு; முறை முறை தரையோடும் அரைத்தனன் - முறை முறையாகத் தரையோடும் அரைக்கலானான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the armour of burning light was cut and fell, scattering fire from both eyes,
  2. he slapped his raised, strong, long arms and roared, and there
  3. seized a long strong club, iron-pointed, diamond-hard, fit for war,
  4. and, as if to make paste of the whole monkey army, ground them into the earth again and again.

What the poem says

Stripped of his armour, Kumpakaruṇaṉ blazes with anger, slaps his arms in defiance and takes up a huge iron-tipped club, with which he pounds the monkeys into the ground as though grinding sandalwood paste.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāntu veñ cuṭark kavacam aṟṟu ukutalum, kaṇtoṟum kaṉal cinti,
ēntu val neṭun tōḷ puṭaittu ārttu, aṅku ōr eḻu muṉai vayirap pōr
vāynta val neṭun taṇṭu kaippaṟṟiṉaṉ; vāṉarap paṭai muṟṟum
cāntu ceykuvaṉām ‘eṉa muṟai muṟai araittaṉaṉ, taraiyōṭum