கம்பராமாயணம் 7650 · யுத்த 15.337

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பறப்ப ஆயிரம், படுவன ஆயிரம்,பகட்டு எழில் அகல் மார்பம்
திறப்ப ஆயிரம், திரிவனஆயிரம், சென்றுபுக்கு உருவாது
மறைப்ப ஆயிரம், வருவன ஆயிரம்,வடிக்கணை என்றாலும்,
பிறப்ப வாய் இடைத் தெழிப்பு உறத் திரிந்தனன்கறங்கு எனப் பெருஞ்சாரி.

பொருள் · Meaning in Tamil

பறப்ப ஆயிரம் - வானத்தில் பறப்பவை ஆயிரம்; படுவன ஆயிரம் - பகைவர் மேல் படுவன ஆயிரம்; பகட்டு எழில் அகல் மார்பம் திறப்ப ஆயிரம் - பெருமையும் அழகும் பெற்று அகன்ற மார்பைப் பிளப்பன ஆயிரம்; திரிவன ஆயிரம் - பறந்து திரிவன ஆயிரம்; சென்று புக்கு உருவாது மறைப்ப ஆயிரம் - பகைவர் உடம்பில் போய் உள் புகுந்து தொளைத்திடாமல் மறைந்தன ஆயிரம்; வருவன ஆயிரம் - இராமன் வில்லில் இருந்து வெளிப்பட்டு வருவன ஆயிரம்; வடிக்கணை என்றாலும் - கூரிய அம்புகள் என்றாலும்; பிறப்ப - வாயிடைப் பேரொலி தோன்ற; ஆயிடை - அங்கே; தெழித்து - அதட்டிக்கொண்டு; கறங்கு எனப் பெருஞ்சாரி உறத் திரிந்தனன் - காற்றாடி போல் பெருஞ்சாரி மிகத் திரிந்தனன் என்க.

இராமன் வடிக்கணை பல்வேறு அழிவுகளைச் செய்தாலும் அதற்கு அஞ்சாது கும்பகருணன் பெருஞ்சாரி திரிந்தனன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. A thousand flying, a thousand striking, a thousand splitting broad, proud, handsome chests,
  2. a thousand wheeling, a thousand vanishing without passing through,
  3. a thousand coming on, sharp arrows though they were,
  4. he wheeled round like a whirligig in great circling moves, roaring as he went.

What the poem says

Irāmaṉ's arrows fly in thousands, striking, splitting chests, circling, vanishing; yet Kumpakaruṇaṉ is not cowed. Roaring, he spins and wheels across the field like a whirligig.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṟappa āyiram, paṭuvaṉa āyiram, pakaṭṭu eḻil akal mārpam
tiṟappa āyiram, tirivaṉa āyiram, ceṉṟu pukku uruvātu
maṟaippa āyiram, varuvaṉa āyiram, vaṭik kaṇai eṉṟālum,
piṟappa āyiṭait teḻittuṟat tirintaṉaṉ kaṟaṅku eṉap peruñ cāri.