கம்பராமாயணம் 7651 · யுத்த 15.338

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தண்டு கைத்தலத்து உளது எனின் - தண்டாயுதம் இவனது கையில் உள்ளதானால்; தானை உளதன்று என்று - குரங்குச் சேனை உயிரோடு இருத்தல் முடியாது என்று எண்ணி; அது சாய - அந்தத் தண்டு அழியுமாறு; கொண்டல் ஒத்தவன் - கருமேகத்தை ஒத்த நிறத்தவன் ஆகிய இராமன்; ஒரு தொடையினில் - ஒரு தொடுப்பினில்; கொடுங்கணை பத்துக் கோத்து எய்தான் - கொடிய அம்புகள் பத்தினை வில்லில் கோத்து எய்தான்; மற்று அது கண்டம் உற்றது - அதனால் அந்தத் தண்டாயுதம் துண்டாகி விட்டது; கருங்கழல் அரக்கனும் - அதனால் கரிய கழலை அணிந்த அரக்கன் ஆகிய கும்பகருணனும்; கனன்று - சினம் கொண்டு; ஆங்கு - அப்போது; ஓர் மண்டலச் சுடராம் என வாளோடும் கேடகம் வாங்கினன் - ஒப்பற்ற பூமியில் விளங்கும் கதிரவன் என்னுமாறு ஒளியுடை வாளும் கேடகமும் கைக்கொண்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If the club is in his hand, there is no army left,' thinking so, to make it fall,
  2. he who was like a rain cloud set ten cruel arrows to a single draw and shot;
  3. and it broke in pieces; the demon with dark anklets, flaring up there,
  4. took a shield, like a round disc of light, together with a sword.

What the poem says

Irāmaṉ, dark as a rain cloud, sees that the monkey army will not survive while Kumpakaruṇaṉ has his club, so he shoots ten arrows at once and breaks it. The furious giant snatches up a sword and a shield that shines like the sun's disc.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘taṇṭu kaittalattu uḷatueṉiṉ, uḷataṉṟu tāṉai ‘eṉṟu, atu cāyak
koṇṭal ottavaṉ, koṭuṅ kaṇai pattu oru toṭaiyiṉil kōttu eytāṉ;
kaṇṭam uṟṟatu maṟṟu atu; karuṅ kaḻal arakkaṉum, kaṉaṉṟu āṅku ōr
maṇṭalac cuṭarām eṉak kēṭakam vāṅkiṉaṉ vāḷōṭum.