கம்பராமாயணம் 7652 · யுத்த 15.339
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வாள் எடுத்தலும் - கும்பகருணன் வாள் படையை எடுத்த உடனே; வானர வீரர்கள் மறுகினர் - குரங்குப் படை வீரர்கள் மனம் கலங்க; வழி தோறும் தாள் எடுத்தனர் - வழி தோறும் கால் விசைத்து ஓடினர்; வானவர் சமழ்த்தனர் தலை எடுத்திலர் தாழ்ந்தார் - தேவர்கள் போர்க்களத்தினராய்த் தலை தூக்க முடியாது தலையைத் தொங்கவிட்டனர்; கோள் எடுத்தது மீள - உயிர்க் கொள்ளை தொடங்கியது மீளவும்; என்று உரைத்தலும் - என்று துணைவர்கள் சொல்லலும்; கொற்றவன் - வெற்றி பொருந்திய இராமன்; எடுத்தது - வாளை எடுத்ததான; குன்று ஒத்த தோள் துணித்தி என்று - குன்று ஒத்த தோளைத் துணிப்பாயாக என்று சொல்லி; ஒருசரம் சுரர் வாழ்த்த துரந்தனன் - ஒப்பற்ற அம்பினைத் தேவர்கள் வாழ்த்தச் செலுத்தினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As he raised the sword, the monkey warriors were thrown into turmoil, and on every path
- took to their heels, ashamed; the gods could not lift their heads but bowed low;
- when they said, 'The slaughter has begun again,' the conqueror said,
- 'Cut off the hill-like arm that raised it,' and, as the gods cheered, loosed one arrow.
What the poem says
As soon as Kumpakaruṇaṉ lifts his sword, the monkeys flee and the gods hang their heads. Hearing his allies cry that the killing has started again, Irāmaṉ commands his arrow to sever the giant's mountainous arm and shoots, while the gods applaud.