கம்பராமாயணம் 7654 · யுத்த 15.341
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பேர் எழில் தோளோடும் - மிக்கு எழுந்து வளர்ந்த அழகிய தோளுடன்; அற்று வீழ்ந்த கை - அறுபட்ட வீழ்ந்த வலக்கையை; அறாத வெங்கையினால் எடுத்து - அறுபடாது உள்ள கொடுமையான இடக்கையினால் எடுத்துக்கொண்டு; அவன் ஆர்த்து ஓடி - அக்கும்பகருணன் பேரொலி எழுப்பிக் கொண்டு ஓடி; எற்ற எயிறு இளித்து ஓடின - அடித்ததனால் பல்லை இளித்துக் கொண்டு ஓடின; வானரக் குலமெல்லாம் - குரங்குக் கூட்டங்கள் எல்லாம்; வீழ்ந்தன - உயிரொழிந்து வீழ்ந்தன; மறத்தொழில் இவன் மாடு பெற்று நீங்கினர் ஆம் - இவ்வாறு வீரப் போரிட்ட இவனிடத்து வீரத்தை இரந்து பெற்றவர்கள் ஆம்; எனின் அல்லது - தவிரப் பிறர்; மற்றும் வீரர்கள் உளர் எனற்கு எளிதரோ - வீரர்களாக வேறு பிறந்தவர் உளர் என்று சொல்லுதல் எளிமையானதோ அன்று.
வலக்கையை இடக்கையால் எடுத்துக் கும்பகருணன் விளைவித்த வீரச் செயலின் சிறப்பை இப்பாடலின் பின்னிரு வரிகள் விளக்குகின்றன. இவனிடம் வீரத்தை இரந்து பெற்றவர்கள் வேண்டுமானால் வீரர்களாக இருக்கலாமே அன்றிப் பிறர் இவனைக் காட்டிலும் சிறந்த வீரர் என்றுரைத்தல் எளிமையான செயலன்று என்றவாறு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Is it easy to say there are other heroes, unless they are men
- who begged the art of war from him and went away? With his handsome, mighty shoulder
- the hand that was cut off and fell he lifted in his uncut, fierce hand, and roaring, running,
- struck out; all the monkey hosts fell, or ran grinning with bared teeth.
What the poem says
Even after losing his right arm, Kumpakaruṇaṉ picks it up in his left hand and uses it as a club, roaring and battering the monkeys, who fall dead or flee with teeth bared in terror. The poet says no one can be called a hero beside him, unless they learned their valour from him.