கம்பராமாயணம் 7655 · யுத்த 15.342

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வள்ளல் காத்து உடன் நிற்கவும் - வள்ளல் தன்மை உள்ள இராமன் சேனையைக் காத்து உடன் இருக்கவும்; வானரத் தானையை - குரங்குச் சேனையை; மறக்கூற்றம் கொள்ளை கொண்டிட - வலிமை உடைய யமன் கொள்ளை கொள்ளும்படி; பண்டையின் மும்மடி குமைக்கின்ற படி நோக்கி - முன்பு அழித்ததை விட மூன்று மடங்கு அழிக்கின்ற தன்மையைப் பார்த்து; உலகு எல்லாம் - உலகோர் எல்லாம்; வெள்ளம் இன்றொடும் வீந்துறும் என்பதோர் விம்மலுற்று - குரங்கு வெள்ளமானது இன்றே அழிந்து போய்விடும் என்று கருதுவதால் துன்பத்தைக் கொண்டு; உயிர் வெம்ப - உயிர்துடிக்க; உள்ள கையிலும் அற்ற வெங்கரத்தையே அஞ்சின - அற்றுப் போகாமல் உள்ள கையினும், அற்றுப் போன கொடிய கரத்தைக் கண்டே பயந்தனர்.

இடக்கையால் அற்ற வலக்கையை எடுத்து மோதி அடித்து அழிப்பதால் அற்றகைக்கு உலகு அஞ்சின என்ற நயம் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Even with the generous one standing by to guard them, seeing how cruel Death
  2. plundered the monkey army, crushing three times as many as before,
  3. all the world, sobbing at the thought, 'The flood of troops will perish today,'
  4. their lives burning, feared the cut-off fierce hand more than the hand still on him.

What the poem says

Though Irāmaṉ stands guard, Kumpakaruṇaṉ's slaughter now triples. Everyone fears the whole monkey army will be wiped out that day. The poet's twist: the world fears the arm that has been cut off, now used as a weapon, more than the one still attached.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaḷḷal kāttu uṭaṉ niṟkavum, vāṉarat tāṉaiyai maṟak kūṟṟam
koḷḷai koṇṭiṭa, paṇṭaiyiṉ mummaṭi kumaikkiṉṟa paṭi nōkki
‘veḷḷam iṉṟoṭum vīntuṟum ‘eṉpatōr vimmaluṟṟu uyir vempa,
uḷḷa kaiyiṉum aṟṟa veṅ karattaiyē añciṉa, ulaku ellām.